பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

இராக்கெட்டுகள்


சந்திரனின் மறுபுறத்தைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் கண நேரத் தோற்றத்தை நமக்கு அளித்தது.

1960ஆம் ஆண்டு மே மாதம் 15 இல் ஸ்புட்னிக்-IV என்ற துணைக்கோள் அயனப்பாதையினுள் சென்றது. இரஷ்யர்கள் இதனை ஒரு ‘விண்வெளிக் கப்பல்’, (Space ship) என்றே வருணித்தனர் ; இஃது அவ்வளவு பெரிதாக இருந்தது. மனிதனை அனுப்புவதற்கு அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த ஊர்தி அளவு அது பெரிதாக இருந்தது. ஏதோ எதிர் பாராத வகையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அதனை மீண்டும் வளிமண்டலத்திற்கு இரஷ்யர்கள் கொண்டுவர முடியாது போயிற்று. அதே யாண்டு ஆகஸ்டு 10இல் அமெரிக்கர்கள் அனுப்பிய சிறிய டிஸ்கவரர்-XIII என்ற துணைக்கோளை அயனப் பாதையினின்றும் திரும்பப் பெற்றுப் புகழடைந்தனர். ஆனால், இரஷ்யர்கள் 9 நாட்களுக்குப் பின்னர், தாம் அனுப்பிய இரண்டாவது விண்வெளிக் கப்பலாகிய ஸ்புட்னிக்-V ஐத் திரும்பவும் பெற்றதால்' இப்புகழ் மிகவும் மங்கிவிட்டது. இதனுள்ளிருந்த பெல்க்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரண்டு நாய்கள், நாற்பது சுண்டெலிகள், இரண்டு எலிகள், ஈக்கள், நுண்கிருமிகள் (Microbes) ஆகிய உயிர்ப் பிராணிகள் யாவும் பிழைத்துத் தப்பின.

அதற்குப் பிறகு இப்புத்தகத்தில் முதல் இயலில் குறிப்பிட்டவாறு யூரி காக்கரின், ஆலன் பி. ஷெப்பார்டு, வி. ஐ. கிரிஸ்ஸம் என்ற விண்வெளி வீரர்கள் விண் வெளிக்குச் சென்று வெற்றியுடன் திரும்பினர். இவர்களைத் தொடர்ந்து இரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் பல விண் வெளி வீரர்கள் இச் செயலில் வாகை சூடினர். 1963அம் ஆண்டு மே 15இல் அமெரிக்க விண்வெளி வீரர் கார்டன் கூப்பர் (Gordon Cooper) ஃபெயித்-7 (Faith-7) என்ற