பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு
கலைச்சொற்கள் விளக்கம்

அகச்சிவப்புக் கதிர்கள் (Infra - red rays): நிறமாலையின் (spectrum) கண்காணும் சிவப்பு நிறத்திற்கு அப்பாலுள்ள கண்காணாக் கதிர்கள்.

அகிலம் (Universe): வானவெளியிலுள்ள கோள்கள், விண்மீன்கள் முதலிய அனைத்தும் அடங்கிய பகுதி.

அடிவளி மண்டலம் (Troposphere): பூமியின் அருகி லுள்ள வளிமண்டலத்தின் அடுக்கு. இது துருவங்களில் சுமார் 5 மைல் உயரம்; பூமியின் நடுக்கோட்டில் சுமார் 10 மைல் உயரம்.

அடுக்குவளி மண்டலம் (Stratosphere): வளிமண்டலத்தில் கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 8 - 20 மைல் உயரமுள்ள அடுக்கு இது.

அண்டக்கதிர்கள் (Cosmic rays): சூரியனிடமிருந்து பெருவேகத்துடன் பூமியை அடையும் கதிர்கள். அவற்றின் ஆற்றல் பல ஆயிர இலட்சம் வோல்ட்டுக்களுக்குச் சமம்.

அயனப்பாதை (Orbit): வான இயலில் சூரியனைச் சுற்றிக் கோள்கள் செல்லும் பாதை. எ - டு. பூமியைச் சுற்றிக் கொண்டு சந்திரன் செல்லும் வழி.

அயனி மண்டலம் (Ionosphere) : வளிமண்டலத்திலுள்ள ஓர் அடுக்கு. இது கடல் மட்டத்திற்குமேல் 50 - 300 மைல் வரை பரவியுள்ளது. இதில் அயனியான வாயுக்கள் உள்ளன.