பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

109

வெளிமண்டல நிலைமைகளையும் ஆராய்வதற்கு அமெரிக்கர் களால் அனுப்பப்பெற்ற இவ்வகைப் பெயர்கள் தாங்கிய இராக்கெட்டு வரிசையில் முதலாவது. இதுதான் ‘வான் அல்லென் கதிர்வீச்சு வளைசூழல்,’ என்ற பெயர் கொண்ட கதிர்வீச்சு மண்டலத்தைக் கண்டது. இது 1958 சனவரி 31 இல் அனுப்பப்பெற்றது. இஃது உருளை வடிவமானது. இதுகாறும் (21-7-1961) இந்தவரிசையில் பல்வேறு நாட்களில், ஒன்பது வரை அனுப்பப் பெற்றுள்ளன.

எதிர்ப்பு இராக்கெட்டு (Retro-rocket): ஓர் ஊர்தியின் மீது அல்லது அதனுள் பொருத்தப்பெற்றுள்ள இராக்கெட்டு. ஊர்தியின் முன்னோக்கிச் செல்லும் வேகத்தைத் தணிப்பதற்குப் இது பயன்படுத்தப்பெறுகின்றது.

எரிந்து போதல் (Burn out): எரிபொருள்கள் தீர்ந்து போன நிலையில், அல்லது அஃது இயந்திரத்திற்குக் செல்லுவதைத் தடுத்த நிலையில், இராக்கெட்டு எரிவது நின்று போகும் தருணம்.

எரிபொருள் (Propellent): உந்துவிசையை உண்டாக்குவதற்கு ஓர் இராக்கெட்டில் எரிக்கப்பெறும் திரவநிலை அல்லது திடநிலையிலுள்ள பொருள்.

ஏவுகணை (Missile): பகைவன்மீது அல்லது பகைவனுக்குச் சொந்தமான விமானங்களின் மீது வீசியெறியப் பெறுவது. பறந்து செல்லும்பொழுதே செல்லும் வழியில் சரியாகச் செலுத்தப் பெறுவது வழிகாட்டி ஏவுகணை (Guided missile); பறக்கும் முதல் நிலையின் பொழுது மட்டிலும் சக்தி தரப்பெற்று நெறிப்படுத்தப்பெறுவது உந்து ஏவுகணை (Ballisitc missile).

ஒலித்தடை (Sound barrier): ஒலியின் வேகமும் விமானத்தின் வேகமும் இணைந்து செல்லும்பொழுது உண்-