பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

இராக்கெட்டுகள்


டாகும் ஓர் உயர் அமுக்கமுள்ள காற்றுச் சுவர். இது விமானத்தைத் தடுத்து நிறுத்துகின்றது.

ஃபெயித்-7 (Faith-7): இது 1963 மே-15 இல் அமெ ரிக்கர்களால் வானவெளியில் எடையின்றி ஒருவர் எவ்வளவு காலம் தங்கியிருக்கலாம் என்று ஆய்வதற்கு அனுப்பப் பெற்ற விண்வெளிக்கூடு (Capsule). இதில் தங்கியிருந் தவர் ‘கார்டன் கூப்பர்’ என்ற விண்வெளி வீரர்.

கவர்ச்சி விதி (Law of gravitation): “இந்த அகிலத்திலுள்ள பொருள்கள் தம்மொடு தாம் கவரப்பெறும் ஆற்றல் அப் பொருள்களின் பொருண்மைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவற்றிற்கிடையேயுள்ள தாரத்தின் வர்க்கத்திற்குத் தலைகீழ் விகிதத்திலும் இருக்கும்” என்பதே இந்த விதி: சர் ஐசாக் நியூட்டன் கண்டறிந்தது.

குதிகுடை (Parachute): விபத்து நேருங்கால் விமானத்திலுள்ளோர் பூமியில் இறங்குவதற்குப் பயன்படும் ஒரு வித குடைபோன்ற அமைப்பு. செல்லும் வழி (Trajectory) : ஓர் இராக்கெட்டு அல்லது ஏவுகணை ஏவப்பெறும் இடத்திலிருந்து தாக்கும் இடம்வரை செல்லும் வழி இது.

ஞாயிற்று மின்கலம் (Solar battery) : ஞாயிற்றின் ஒளியினால் மின்னூட்டம் பெற்று இயங்குவது. விண்வெளி ஆராய்ச்சியில் அனுப்பப்பெறும் தொலைக்காட்சிச் சாதனத்தில் பயன் படுவது.

டிஸ்கவரர் XIII (Discoverer-XIII); அமெரிக்க விமானப் படையினரால் திரும்பப்பெறும் யுக்திமுறைகள், வான வெளி நிலைமைகள், துணைக்கோள்கள் இயங்கும் உயரத்தில்