பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

111

பொருள்களில் ஏற்படும் மாறுதல்கள் முதலியவற்றை ஆராய அனுப்பப்பெற்ற துணைக்கோள்களுள் பதின்மூன்றாவது இது. 1960ஆகஸ்டு 10இல் அனுப்பப்பெற்று மறுநாள் திரும்பப் பெறப்பட்டது. இதுவரை (21-7-61) இந்த வரிசையில் 26 துணைக்கோள்கள் அனுப்பப்பெற்றுள்ளன.

துணைக்கோள் (Satellite) : வானத்தில் ஒரு பெரிய கோளினைச் சுற்றி அயனப் பாதையில் சுற்றும் சிறுகோள். எ-டு. சந்திரன் பூமியின் துணைக்கோள்.

தொலை ஒலிப்பான் பதிவு (Telemetering) : ஓர் இராக்கெட்டிலுள்ள ஒரு கருவியிலிருந்து வானவெளியைப் பற்றிய தகவல்களை (Space data) வானொலி மூலம் நிலத்திலுள்ள ஒரு பொறிக்கு அனுப்பிப் பதிவு செய்யும் முறை.

பயனீயர்-1 (Pioneer-I) : இது ஆழ்ந்த விண்வெளி ஆராய்ச்சியில் கோள்களுக்கிடையிலுள்ள விண்வெளியின் நிலைமைகளைக் காணத் தொடர்ந்து அனுப்பப்பெற்ற துணைக்கோள்களுள் முதலாவது. இது 1958-அக்டோபர் 12-இல் அனுப்பப்பெற்றது. இது 71,000 மைல் உயரத்தை எட்டியது. இன்றுவரை (21-7-61) இந்த வரிசையில் ஐந்து துணைக்கோள்கள் அனுப்பப்பெற்றுள்ளன.

பல நிலை இராக்கெட்டுகள் (Multistaged rockets) : ஒன்றன் மீது ஒன்றாகப் பல இராக்கெட்டுகளை அமைத்து ஒன்றன் பின் ஒன்றாகச் சுட்டு மிக உயரத்திற்குச் செலுத்தப்பெறும் இராக்கெட்டுகளின் தொகுதி.

புறஊதாக் கதிர்கள் (Uitra-violet rays) : சூரிய ஒளியின் கண்காணாக் கதிர்கள்; இவை சுடுபுண்களை (Sunburn) உண்டாக்கும். கண்காணா அலைநீளங்களையுடைய இவை