பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

இராக்கெட்டுகள்


நிறமாலையின் கண்காணும் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலுள்ளவை.

புறவாயு மண்டலம் (Exosphere): கடல் மட்டத்திற்குச் சுமார் 200 மைல் உயரத்திற்கு மேலே உள்ள வளிமண்டலப் பகுதி.

போலேரிஸ் (Polaris): இவை கடற் படையின் ஒருவகை ஏவுகணைகள்; திட எரிபொருளைக் கொண்டவை. இந்த மாபெரும் இராக்கெட்டுகளைக் கப்பல் தளத்தினின்றும் இயக்க முடியாது. இஃது 1500 மைல்வரை செல்லக் கூடிய இடைநிலை எல்லை உந்து ஏவுகணை (IRBM) ஆகும். இது நீர் மூழ்கிக் கப்பலினின்றும் எய்யப்பெறலாம். ஒரு நீர்முழ்கிக் கப்பல் 16 இவ்வகை ஏவுகணைகளைச் சுமந்து செல்லக்கூடும்.

மிகஅண்மை உயரம் (Perigee): சந்திரன் அல்லது ஒரு செயற்கைத் துணைக்கோள் தனது அயனப் பாதையிலிருந்து பூமிக்கு மிக அண்மையிலுள்ள உயரத்தின் இடம்.

மிகத் தொலைவான உயரம் (Apogee): சந்திரன் அல்லது ஒரு செயற்கைத் துணைக்கோள் தனது அயனப்பாதையிலிருந்து பூமிக்கு மிகச் சேய்மையிலுள்ள உயரத்தின் இடம்.

மின்காந்த அலைகள் (Electro-magnetic waves): மணிக்கு 1,86,000 மைல் வீதம் செல்லும் வானொலி அலைகள், ஒளி அலைகள் ஆகியவை.

மூலக்கூறு (Molecule): ஒரு பொருளின் பண்புகளைப் பெற்றுள்ள அப்பொருளின் மிகச் சிறிய பகுதி. எ-டு. நீரின் மிகச்சிறிய பகுதி நீரின் தன்மைகளைப் பெற்றுள்ளது.

லூனிக்-I (Lunik-I) : லூனிக் என்பது அமெரிக்கர்கள் இரஷ்யர்களின் சந்திரமண்டல வெளி ஆராய்ச்சிக்குத் தந்த