பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

113

சாட்டுப் பெயர் (Nickname). லூனிக்-1 என்பது முதன் முதலாகச் சந்திரனுக்கு மிக அண்மையில் செல்லுமாறு அனுப்பப்பெற்ற முதல் இரஷ்யச் செயற்கைத் துணைக்கோள். இது 1959 சனவரியில் அனுப்பப்பெற்றது. சூரியனைச் சுற்றி இது சுமார் 15 மாதகாலம் சுற்றிக் கொண்டிருந்தது.

லூனிக்-II (Lunik-11) : இது 1959 செப்டம்பர் 12 இல் அனுப்பப்பெற்றது. இது சந்திரனுக்குள் பாய்ந்த முதல் செயற்கைத் துணைக்கோள். 35 மணி நேரம் பிரயாணம் செய்து மறுநாள் சந்திரனைத் தொட்டது.

லூனிக்-III (Lunik-III) : 1959 அக்டோபர் 4 இல் அனுப்பப்பெற்ற இந்தத் துணைக்கோள் சந்திரனுக்கு அப்பாலும் சென்று அதன் பின்புறத்தோற்றத்தை ஒளிப்படங்களாக எடுத்து, உருத்துலக்கி, தொலைக்காட்சிச்சாதனத்தின் மூலம் பூமிக்கு அனுப்பியது. சந்திரனின் கவர்ச்சி ஆற்றலின் விளைவுகள் இதன் ஆயுட்காலத்தைக் குறைத்து விட்டது.

வழிகாட்டி அமைப்பு (Guidance system) இராக்கெட்டுகள் வானவெளியில் செல்லுங்கால் அவை சரியான முறையில் திட்டமிடப்பெற்ற பாதைகளில் செல்லுமாறு செய்வதற்குரிய அமைப்பு இது. ஒருவகையில் எதிர் இராக்கெட்டுகளும் மற்றொருவகையில் ஜைராஸ்கோப்பும் உள்ளன.

வளி மண்டலம் (Atmosphere) : பூமியைச் சூழ்ந்துள்ள காற்றின் தொகுதி இப்பெயர் பெறுகின்றது.

வான்கார்டு I (Vanguard-I) : இது முதன் முதலாக அனுப்பப்பெற்ற சூரிய ஒளியால் சக்திபெற்ற துணைக் கோள். 1958 மார்ச் 17 இல் அனுப்பப்பெற்ற இது 2,453 மைல் உயரம்வரை சென்றது.

இ-3