பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

இராக்கெட்டுகள்


வான் அல்லென் கதிர்வீச்சு வளைசூழல் (Van Allen Radiation Belt): பூமியிலிருந்து சில நூறு மைல்கட்கு அப்பால் வான வெளியில் தீவிரமான கதிரியக்கக் கிளர்ச்சியுள்ளது இது ‘வான் அல்லென் கதிர் வீச்சு வளை சூழல்’ என வழங்கப் பெறுகின்றது.

விடுபடு தேர்வேகம் (Escape velocity): மணிக்குச் சுமார் 25,000 மைல் வேகத்தில் ஒரு பொருள் பிரயாணம் செய்தால் அது பூமியின் ஈர்ப்பு ஆற்றலைச் சமாளிக்கும். அஃதாவது, அஃது அந்த ஆற்றலினின்றும் விடுபடும். இந்த வேகமே அதன் ‘விடுபடு நேர் வேகம்’ ஆகும்.

விண்கல் (Meteorite): வீழ்மீன் காற்றில் சரியாக எரியாததால் அது பூமியின் மேற்பரப்பின் மீது வீழ்கின்றது. வீழ்மீனின் எரியப்பெறாத சிறு பகுதியே ‘விண்கல்’ ஆகும்.

வீழ்மீன் (Meteor: பூமியின் வளி மண்டலத்தினூடே செல்லுங்கால் எரியும் ஒரு சிறு வான்வெளிப் பொருளாகும் இது.

வெப்பத் தடை (Heat barrier) : ஒரு விமானத்தின் வேகம் அதிகரித்து, ஒலியின் வேகத்தையும் கடந்து, 1500 மைல் வேகம் அடையத் தொடங்கினால், அது காற்றின் மூலக்கூறுகளுடன் வன்மையாக மோதுகின்றது. இதனால் விமானம் சூடேறத் தொடங்குகின்றது. இதுவே வெப்பத்தடை; விமானிகள் இதனை ‘வெப்பத் தாக்குதல்’ என்கின்றனர்.

வெளியேறு நேர்வேகம் (Exhaust velocity): ஓர் இராக்கெட்டின் கூர் நுனிக் குழலின் வழியாக ‘ஜெட் வாயுக்கள்’ எந்த வேகத்தில் வெளியேற்றப் பெறுகின்ற