பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

115

னவோ, அந்த வேகம் இராக்கெட்டின் ‘வெளியேறு நேர் வேகம்’ என வழங்கப்பெறுகின்றது.

வேதியியல் வளி மண்டலம் (Chemosphere) : கடல் மட்டத்திற்குமேல் 20 லிருந்து 50 மைல்வரையிலுள்ள வளி மண்டலத்தின் அடுக்கு இப்பெயர் பெறுகின்றது. இதில் ‘ஓஸோன்’ அடுக்கும் உள்ளது.

ஸ்புட்னிக்-1 (Sputnik-1) : இது தான் உலகிலேயே முதன் முதலாக அனுப்பப்பெற்ற பூமியின் துணைக்கோளாகும். 1957-அக்டோபர் 4 இல் இரஷ்யர்களால் அனுப்பப் பெற்ற இது கடல் மட்டத்திற்குமேல் 588 மைல் உயரம் வரைசென்றது. இதன் எடை 184.3 இராத்தல்.

ஸ்புட்னிக்-11(Sputnik-II) : 1957 நவம்பர் 3 இல் அனுப்பப்பெற்ற துணைக்கோள் இது. இதன் எடை 1120 இராத்தல். இது கடல் மட்டத்திற்கு மேல் 1038 மைல் உயரம்வரை சென்று 1958-ஏப்ரல் 14 இல் திரும்பியது. இது முதன்முதலாக ‘லைக்கா’ என்ற நாயையும் விண் வெளிக்குக் கொண்டு சென்றது.

ஸ்புட்னிக்-III (Sputnik-IT1) : இது 1958 மே 15 இல் அனுப்பப் பெற்றது; அதே ஆண்டு ஏப்ரல் 6 இல் திரும்பியது. பல்வேறு அளவுகளை அளப்பதற்காகப் பல ஏற்பாடுகளுடன் சென்றது. அண்டக்கதிர்கள், கதிர் வீச்சுவளை சூழல், காந்தப் புலம், வீழ்மீன்கள் முதலியவற்றைப் பற்றிப் பல தகவல்களை இதனால் அறிய முடிந்தது. இதன் எடை 1 டன் 6 அந்தர் (2,912 இராத்தல்).

ஸ்புட்னிக்-IV (Sputnik-IV) : 1960 மே 15 இல் அனுப்பப்பெற்ற இது ஏதோ எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அதனை மீண்டும் வளி மண்-