பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இராக்கெட்டுகள்


தந்தையைக் கண்ட குமுதம் ஓடோடி வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டு, "அப்பா, நானும் அண்ணனும் படம் பார்க்கச் சென்றிருந்தோம். செய்திச் சுருளில் நாங்கள் கண்ட 'வான்வெளிப் பயணம்' எங்கள் மனத்தை விட்டு அகலவில்லை” என்று கொஞ்சிக் கூறினாள்.

படம் 1: தந்தை மக்களுடன் உரையாடும் காட்சி

"அப்படியா கண்ணு, இந்தப் பயணத்தைப்பற்றிய செய்திகள்தாம் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருகின்றனவே? அமெரிக்காவும் இரஷ்யாவும் மாறிமாறி இத்தகைய பயணங்களை மேற்கொள்ளுகின்றன. இரண்டு நாட்டு அறிவியலறிஞர்களும் அடிக்கடி வான்வெளியைப் பற்றி ஆராய்ந்த வண்ணம் இருக்கின்றனர். செயற்கைத் துணைக்கோள்கள் அடிக்கடி வான வெளியில் சுற்றி வந்து