பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயச் செய்திகள்

3


கொண்டிருக்கின்றன. நீங்கள் பத்திரிகைகளைப் படிக்கும் பொழுது இத்தகைய செய்திகளையும் நன்கு படிக்கவேண்டும்” என்று கூறினார் தந்தை.

“நான் படிக்காமல் இல்லை. படிக்கத்தான் செய்கின்றேன். ஆனால், அந்தப் பயணத்தின் நோக்கமும் வான்வெளி ஆராய்ச்சியின் நோக்கமும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆதலால், இத்தகைய செய்திகள் எனக்கு இனிக்கவில்லை. பொதுமக்கள் பெரிய எழுத்துக்களில் வெளியாகும் இத்தகைய செய்திகளை ஒருவித உற்சாகத்துடன் பேசுகின்றனர். ஆனால், பெரும்பாலோருக்கு இவை ஒரு வியப்பினை விளைவிப்பதுடன் நின்று போகின்றன. வரவரப் பெரும்பாலோர் இத்தகைய செய்திகளைப் படிப்பதும் இல்லை. பத்திரிகைகளிலும் இச்செய்திகள் எங்கோ ஒரு மூலையில் வெளியிடப்பெறுகின்றன” என்றான் குமணன்,

“நம்நாட்டு மக்களுக்கு இன்னும் போதுமான கல்வியறிவு ஏற்படவில்லை. அதுவும் அறிவியல் பற்றிய செய்திகள் அவர்கள் உள்ளத்தைக் கவர்வதில்லை” என்றார் தந்தை,

“நாங்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் அறிவியல் புத்தகங்கள் வெளிவந்தால் இவற்றைப் புரிந்து கொள்வோம். தமிழில் இத்தகைய அறிவியல் புத்தகங்கள் அரியனவாகவே உள்ளன” என்றாள் குமுதம்.

“வான்வெளிப் பயணம்பற்றிய நிகழ்ச்சிகளை நேரில் கண்ணால் படத்தில் கண்டும் அவைபற்றிய கருத்தினைப் புரிந்து கொள்ள முடியவில்லையே!” என்றான் குமணன்.

“கடந்த ஒரு சில ஆண்டுகளாக வான்வெளிப் பயணம் பற்றிய செய்திகளே பத்திரிகைகளில் அதிசயச் செய்திகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டிலும் புதிய புதிய