பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இராக்கெட்டுகள்


இனி, மனிதன் பூமியுடன் பிணைக்கப்பெற்றிருப்பான் என்று கூறவும் முடியாது. எந்த நேரத்திலும் அவன் பூமியினின்றும் விடுபடலாம். இதற்கு வேண்டியதெல்லாம் மனவுறுதி மட்டிலுமே. இந்த மனவுறுதியினை மட்டிலும் அவன் அடைந்துவிட்டால், பல்வேறு அருஞ்செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நடைபெறும். அமெரிக்களும், சோவியத் யூனியனும் இத்துறையில் அளவற்ற ஊக்கம் காட்டி வருகின்றன.”

“இராக்கெட்டு விமானிகள் (Astronauts) பயிற்சிதரப் பெறுகின்றனர். மனிதன் மேலே செல்லுவதற்கு வேண்டிய பொறி நுட்ப அமைப்புக்கள் ஆயத்தமாகி வருகின்றன. அவன் தங்குவதற்கு வேண்டிய மேலுறைகள் (Capsules) தக்கவாறு அமைக்கப்பெற்று வருகின்றன. இத்துறை பற்றிய எண்ணற்ற நுட்பச் செயல்கள் யாவும் முறையாகக் கவனிக்கப்பெறுகின்றன.”

“இறுதியில் இரஷ்யா தான் ஒரு மனிதரை வான் வெளிப் பயணத்தில் அனுப்புவதாக அறிவித்தது. 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி காக்கரின் (Yuri Gagarin) என்பார் முதன் முதலாக வான மண்டலத்தில் நுழைந்து வெற்றியுடன் திரும்பினார். வானவெளி எல்லை கடந்தாய் விட்டது! சோவியத் அருஞ்செயலைத் தொடர்ந்து அமெரிக் காவும் ஒரு மனிதரை அனுப்புவதாக அறிவித்தது. அதேயாண்டு மேத் திங்கள் 5ஆம் நாள் தளபதி ஆலன் பி. ஷெப்பார்டு (Commander Alen B. Shepard) என்பார் 115 மைல்வரை உயரத்தில் சென்று இவ்வுலகைச் சுற்றினார். இரண்டு மாதங்கள் கழிந்ததும் காப்டன் வி. ஐ. கிரிஸ்ஸம் (Captain V. I. Grissom) என்பார் ஷெப்பார்டு செய்த துணிகரச் செயலையே திரும்பவும் செய்து காட்டினார்.”