பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. சர் ஐசாக் நியூட்டன்

ர் ஐசாக் நியூட்டன் (கி. பி. 1642 - 1727) ஒரு புகழ் பெற்ற ஆங்கில அறிவியலறிஞர் ; கணித மேதை. சிறு வயதிலேயே பள்ளிப் பாடங்களைப் படிப்பதை விடப் புதிய புதிய கருவிகளை அமைப்பதில் ஆர்வ முடனிருந்தார். சிறுவனாக இருந்த போதே கோதுமை போன்ற தானியங்களை அரைக்கக் கூடிய காற்றாலையையும், நீர்க்கடிகாரத்தையும் நிழற் கடிகாரத்தையும் அமைத்துப் புகழ் பெற்றார். இத்தகைய மேதையின் வாழ்க்கையில் பல சுவையான நிகழ்ச்சிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று : அவர் இரண்டு

பூனைகளை வளர்த்து வந்தார். ஒன்று தாய்ப்பூனை; மற்றொன்று அதன் சேய். அந்த இரண்டு பூனை களும் அவர் உண்ணும் பொழுதும் உறங்கும்பொழுதும் அவருடனேயே இருக்கும் பழக்க முடையவை. அவ்வளவு அன் பாக அவற்றை வளர்த்து வந்தார் அவர்.

இரவில் அந்த அறிஞர் உறங் கும்பொழுது பூனைகளும் அவ ருடைய கட்டிலின் அருகிலேயே படுத்துக் கொள்ளும். இரவில் அவர் அயர்ந்து உறங்கும் பொழுது அறைக் கதவுகளைத் தாளிட்டு விடுவது வழக்கம். பூனைகள் வெளியில் செல்ல முடியாமல் பேரொலியினை விளைவித்து அவரது உறக்கத்தைக் கலைத்தன. இஃது அவ