பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர் ஐசாக் நியூட்டன்

11


நோக்கித் தள்ளிக் கரையை அடைய முயல்கின்றார். இவ்வாறு முன் நோக்கித் தள்ளும் விசைதான் நியூட்டன் குறிப்பிடும் இயக்கம்' என்பது. அவருடைய பின் காலினால் படகிற்குத் தரும் விசைதான் படகினைக் கரையினின்றும் பின்னோக்கித் தள்ளுவது ; இந்த விசையே நியூட்டன் குறிப்பிடும் 'எதிரியக்கம்' என்பது. இஃது உடலை முன்னோக்கித் தள்ளும்

படம் 3: படகிலிருந்து ஆற்றின் கரைக்குத் தாண்டுவதைக் காட்டுவது


விசைக்குச் சமமாகவும், ஆனால் அந்த விசைக்கு எதிராகவும் இருக்கும். இதனால் தான் படகு பின்னோக்கி நகரவே அவர் 'தாண்டிக் குதிக்க' நேரிடுகின்றது.

இதனை இன்னோர் எடுத்துக்காட்டால் விளக்குவோம்: ஆற்றோரத்தில் ஆளில்லாத இரண்டு படகுகள் உள்ளன. படகுக்காரன் ஒருவன் ஒரு படகில் நின்று கொண்டு படகு வலிக்கும் கோலினைக் கொண்டு மற்றொரு படகினைத் தள்ளு