பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இராக்கெட்டுகள்


கின்றான். நாம் கரையில் நின்று கொண்டு பார்த்தால் இரண்டு படகுகளும் எதிர்த்திசைகளில் சமதூரத்திற்கு நகருவதைக் காணலாம். படகுக்காரன் அடுத்த படகு நகரும் பொருட்டுத்

படம் 4 : படகுக்காரன் ஒரு படகில் நின்று கொண்டு
மற்றொரு படகினைத் தள்ளுவதைக் காட்டுவது

தரும் விசைக்குச் சமமான விசையினை இவனுக்கு அந்தப் படகு தருவதால் இவன் நிற்கும் படகும் பின்னோக்கி நகர்கின்றது.

சர் ஐசாக் நியூட்டன் கண்டறிந்த கவர்ச்சி விதி, இயக்க விதி இவற்றின் அடிப்படையில்தான் இராக்கெட்டுகள். செயற்கைச் சந்திரன்கள், வானக் கப்பல்கள் முதலியவை அமைந்துள்ளன. இவற்றை மேலே காண்போம்.