பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. இராக்கெட்டின் கதை

ராக்கெட்டைப்பற்றி அறிந்து கொள்ளும் நாம் அதன் வரலாற்றையும் அறிந்து கொள்ளுதல் பொருத்தமாகும். 13 ஆம் நூற்றாண்டில் சீனர்கள் தாம் முதன்முதலாக இராக்கெட்டுகளைக் கண்டறிந்ததாக நம்பப்பெறுகின்றது. வெடிமருந்துகளைப்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந் தனர். கி. பி. 1232 இல் அவர்கட்கும் மங்கோலியர்கட்கும் நடைபெற்ற போரில் இராக்கெட்டுகளை “நெருப்பு அம்புகளாகப்” பயன்படுத்தினர். அதன் பிறகு நீண்டகாலம்வரை இராக்கெட்டுகள் வாண வேடிக்கைக்காகவே பயன்படுத்தப் பெற்றன. ‘சீன வெடி’ என்று கேள்வியுற்றிருக்கின்றோம் அல்லவா? ‘சீறு வாணம்’ என இன்று வழங்கப்பெறும் இராக்கெட்டும் சீனர்களுடையதுதான்.

கி. பி. 1782 இல் மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த சீரங்கப் பட்டினத்தில் திப்பு சுல்தானுக்கும் ஆங்கில கவர்னர் ஜெனரலாக இருந்த கார்ன் வரலிசு பிரபுக்கும் ஒரு பெரும்போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் திப்பு சுல்தான் இராக்கெட்டுகளைப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது. பீரங்கிகளும் துப்பாக்கிகளும் போர்க் கருவிகளாக அமைந்த பிறகு இராக்கெட்டுகளைப்பற்றி மக்கள் மறந்தே போயினர். ஒவ்வொன்றும் 12 இராத்தல் எடையுள்ளதும் சுமார், அரை மைல் எல்லைவரை செல்லக் கூடியதுமான இராக்கெட்டுகளைப் பயன்படுத்தினார் திப்பு சுல்தான். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான இராக்கெட்டுகள் சுடப்பெற்றுத் தற்காலிக வெற்றியையும் அவர் அடைந்தார். இந்நிகழ்ச்சி இங்கிலாந்தில் இராக்கெட்டு பீரங்கிப் படையைப்பற்றிய அக்கறையைத் தூண்டியிருக்கலாம். சற்றேறக்குறைய