பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இராக்கெட்டுகள்


காங்கிரீட்டு தளங்களும், இராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கு ஏற்ற மிகப் பெரிய நிலையங்களும் உள்ளன. இராக்கெட்டுகள் எதிர்பாராத வண்ணம் போக்குமாறிச் சென்று நொறுங்கி விழுந்தாலும் இக்கட்டடம் தாங்கக்கூடிய உறுதியுடன் கட்டப்பெற்றுள்ளது. கட்டடத்தின் கூரை மட்டும் 25 அடி கனமுள்ளது ; சுவர்கள் 10 அடி கன

படம் 6 : இராக்கெட்டில் அமைக்கப்பெற்றுள்ள கருவிகளினின்றும்
தகவல்கள் ஏற்புக் கருவிகளை அடைதல்

முள்ளன. இக்கட்டடத்தில் புறாக்கூடு போன்ற அறைகளிலிருந்துகொண்டு சோதனைகளை நன்முறையில் கவனிக்கலாம். 8 அங்குல கனமுள்ள கண்ணாடிகள் பொருத்தப்பெற்றுள்ளன. நகரக்கூடிய பெரிய எஃகு ஏணி ஒன்று இங்குள்ளது. இதிலிருந்துகொண்டு பணியாளர்களும் ஆய்வாளர்களும் இராக்கெட்டை அமைப்பதற்கான செயல்களைக் கவனித்து வருகின்றனர்.