பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இராக்கெட்டுகள்


வோம். அஃதாவது, காற்றின் மூலக்கூறுகள் நெருங்கியிருக்குமாறு தள்ளப்பெறுகின்றன; இந்த நெருக்கமான பகுதிகள் ஒலியின் மூலத்தினின்றும் வெளிப்புறமாகப் பரவுகின்றன.

ஒரு விமானம் ஒலிவேகத்தைவிடக் குறைவான வேகத்துடன் செல்லும்பொழுது விமானத்தினின்றும் புறப்படும் காற்றலைகள் விமானத்திற்கு முன்னதாக வேகமாக விரைந்து செல்லுதல் கூடும். ஆனால், விமானம் ஒலியின் வேகத்திற்கு அதிகரித்துக் கொண்டே செல்லும்பொழுது, அஃது ஒலியலைகளுடன் இணைந்து செல்லுகின்றது. இந்நிலையில் நெருக்கமுள்ள காற்றலைகள் விமானத்திற்கு முன்னதாகச் செல்ல முடிவதில்லை. ஆகவே, அவை விமானத்தின் இறக்கைகளுக்கு முன்புறமும், அதன் உடலின் (Fuselage) முன்புறமும் குவிகின்றன. இதன் விளைவாக ஓர் உயர்அமுக்கமுள்ள காற்றுச் சுவர் விமானத்திற்கு முன்புறம். குவியலாக அமைகின்றது. இப்பொழுது விமானம் மிக விரைவாகச் செல்ல முயன்றால், அஃது இந்தச் "சுவரை” உடைத்துக்கொண்டு சென்றாக வேண்டும். இந்தச் சுவரை விமானத்திலிருந்துகொண்டு உடைப்பதென்பது மிகவும்: சிரமமான செயலாகும்.

ஒலியின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் விமானம் செல்லும்பொழுது விமானம் ஒலியலைகளைத் தன் பின்னே விட்டு விடுகின்றது; அவை அங்கு விமானத்திற்கு, எந்தவிதமான சங்கடத்தையும் விளைவிக்க முடியாது. விமானம் காற்றுத் தடையினுள் செல்லும்பொழுது அதன் வேகத்தை வளர்த்தாலும் அல்லது குறைத்தாலும் நெருக்கமுள்ள ஒலியலைகள் குறுக்கிடுகின்றன. ஆகவே, விமானம் ஒலி வேகத்தில் பறப்பதைத் தவிர்த்தல் வேண்டும். அஃது