பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இராக்கெட்டுகள்

ளனர்; இவ்விமானங்கள் இத்தடையினூடே சிறிதும் சிரம மின்றிச் செல்லுகின்றன. இவ்விமானங்கள் “மீ ஒலி வேக விமானங்கள்” (Supersonic planes) என்று வழங்கப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, டூக்லாஸ் ஆகாய இராக்கெட்டு (Douglas sky rocket) என்பது ஒரு மீ ஒலிவேக விமானமாகும்; இஃது ஒலியின் வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கின்றது. படத்தில் (படம் 16) ஊசி போன்ற அதன் மூக்கினையும், மெல்லிதான இறக்கை. அமைப்பினையும் காண்க. இந்த வடிவம் ஒலித் தடையைக் கிழித்துக்கொண்டு செல்வதற்குத் துணைசெய்கின்றது. இதனை மனத்திற்கொண்டுதான் இராக்கெட்டின் வடிவமும் அமைக்கப்பெறுகின்றது.

வெப்பத்தடை : விமானத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகும்பொழுது இன்னும் ஒரு பிரச்சினை எழுகின்றது. அது தான் வெப்பத்தடை என்ற பிரச்சினையாகும். உண்மையில் அஃது ஒரு தடையன்று. ஏனெனில், அஃது ஒரு திட்டமான வேகத்தாலோ அல்லது உயரத்தாலோ ஏற்படுவதில்லை. காற்றின் உராய்வால் விமானம் சூடேறத் தொடங்கியதும் வேகம் அதிகரிக்க அதிகரிக்கச் சூடும் அதிகரிக்கின்றது. இக்காரணத்தால் விமானிகள் இந்நிகழ்ச்சியை “வெப்பத் தாக்குதல்” என்று வழங்குகின்றனர்.

கடல் மட்டத்தில் மணிக்கு 700 மைல் வேகத்தில் செல்லும் ஒரு விமானம் காற்றின் உராய்வால் காற்றின் வெப்ப நிலையைவிட 100o F சூடேறி விடுகின்றது என்று கணக்கிட்டுள்ளனர். இதனுடன் சூரிய வெப்பத்தையும், இயக்கும் பொறிகளின் வெப்பத்தையும், இவை போன்ற பிறவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால்