உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு தடைகள்

39


விமானம் வெப்பத்தால் வசதி குறைவற்றதாகி விடுகின்றது; வலுவையும் இழக்க நேரிடுகின்றது.

இதனை மேலும் சிறிது விளக்குவோம். பொருள்களின் மூலக்கூறுகள் இயங்கிச் செல்லும் வேகமே 'வெப்பம்' என்பதை நாம் அறிவோம். வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க மூலக்கூறுகளும் வேகமாக இயங்குகின்றன. மூலக்கூறுகள் மெதுவாக இயங்குங்கால் பொருள்கள் குளிர்ச்சியாக உள்ளன ; அவை விரைவாக இயங்கும் பொழுது பொருள்கள் வெப்பமாக உள்ளன. விமானம் ஒலியின்" வேகத்தைக் கடந்து ஏறக்குறைய மணிக்கு 1500 மைல் வேகத்தை அடையும்பொழுது, காற்றின் மூலக்கூறுகள் விமானத்தைவிட வேகமாக இயங்கிச் செல்லுகின்றன. அஃ

படம் 17: காற்றின் மூலக்கூறுகள் விமானத்தின்
இறக்கைகளைத் தாக்குகின்றன

தாவது, காற்றின் மூலக்கூறுகள் விமானத்தின் இறக்கைகளை அடிக்கடி வேகமாக முட்டி மோதிக் கொண்டுள்ளன. இதனால் விமானம் மிகச் சூடேறுகின்றது. இதனை மேலேயுள்ள படம் விளக்குகின்றது.

இராக்கெட்டுகளோ விமானத்தைவிட மிக வேகமாகக் காற்றினூடே செல்லுகின்றன; மிக உயரத்திற்கும் செல்லு