பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இராக்கெட்டுகள்

இராக்கெட்டுகள் மேற்கூறிய செயலை நிறைவேற்றுதல் கூடும். அறிவியலறிஞர்கள் இதனை உறுதியாக நம்புகின்ற னர். தேவையான உந்து விசையைப் பெறுவதற்கேற்றவாறு போதுமான அளவு எரிபொருளை ஓர் இராக்கெட்டு எரிக்கக் கூடுமாயின், அஃது இராக்கெட்டின் வேகத்தைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்கின்றது. ஓர் இராக்கெட்டு தன்னுள்ளே வளர்த்துக் கொள்ளக்கூடிய “தள்ளும்” அளவே உந்து விசை என்பது. அஃது இராத்தல்களில் அளக்கப் பெறுகின்றது. செருமானியர் நிருமாணித்த வி-2 இராக்கெட்டின் எடை 28,000 இராத்தல்கள்; அதன் உந்து விசை 56,000 இராத்தல்கள். அதன் உந்து விசை அதனைப் பூமியினின்றும் உயரே தூக்குவதற்குப் போதுமானது. உந்து விசையின் அளவு (1) எரிபொருள்கள் எரியும் வேகத்தையும், (2) அதனால் விளையும் வெப்ப வாயுக்கள் வெளியேறும் நேர் வேகத்தையும் பொறுத்தது. ஓர் இராக் கெட்டு பீறிடும் வாயுக்களைக் கூர் நுனிக் குழல் வழியாக வெளிப்படுத்தக்கூடிய வேகமே அதன் வெளியேறு நேர் வேகம் (Exhaust velocity) என்பது. வி-2 இராக்கெட்டின் வெளியேறு நேர்வேகம் வினாடிக்கு 6000 மைல்கள். நவீன இராக்கெட்டுப் பொறிகளின் வெளியேறு நேர் வேகம் இதனைவிட மிக அதிகமாகவே உள்ளது.

மேற்கூறியவற்றை நோக்கும் பொழுது இராக்கெட்டினுள் போதுமான அளவு எரி பொருள்களை (Fuels) அடைப்பது முதல் பிரச்சினையாகின்றது. இன்று நமக்குக் கிடைத்துள்ள எரிபொருள்களைக் கொண்டு ஓர் ஒற்றை இராக் கெட்டு ‘விடுபடும் நேர் வேகத்தை’ அடைய முடியாது என்று அறிவியலறிஞர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர். இராக்கெட்டின் பத்தில் ஒன்பது பாகம் எரிபொருள்களும், அதன் ஒருபாகம் எரிபொருள் தொட்டிகள், பொறிகள்