பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈர்ப்பு ஆற்றல்

47

தங்குமிடம் முதலியவைகளும் அடங்குமாறு ஓர் இராக் கெட்டு அமைக்கப்பெற்றாலும், பாதியளவு ‘விடுபடும் நேர் வேகத்தைக்’கூட அஃது அடைதல் இயலாது. அத்ததைய இராக்கெட்டு ஒன்று தன்னுடைய எரிபொருள்கள் முற்றி லும் தீர்ந்து போவதற்குள் மணிக்கு 10,000 மைல்களுக்குக் கீழுள்ள வேகத்தையே அடைகின்றது.

எனினும், இராக்கெட்டுகளைக்கொண்டு புவியீர்ப்பு ஆற்றலை நாம் வென்று விடலாம். ஒன் றன்மீது ஒன்றாக இரண்டு அல்லது மூன்று இராக்கெட்டுகளை அமைத்து இதனை எளிதில் நிறைவேற்றலாம். இவ்வாறு அமைக்கப் பெறும் இராக்கெட்டு பல்நிலை இராக்கெட்டு (Multi-staged) எனப்படும். பெரும்பாலான எரி பொருள்களையும் எடையையும் சுமந்துகொண்டுள்ள முதல் இராக்கெட்டு சுடப் பெறுகின்றது; இந்நிலையில் இஃது ஏனைய இராக்கெட்டுகளைத் தன்மீது வலித்துக் கட்டப்பெற்ற நிலையிலிருக்கும். இந்த முதல் இராக்கெட்டு காற்றின் பெரும்பாலான உராய்வினையும் (Friction) பூமியின் கவர்ச்சியாலுண்டாகும் இழுப்பினையும் வெல்லுகின்றது. இதிலுள்ள எரி பொருள்கள் முடிவுறும் தறுவாயில் இரண்டாவது இராக்கெட்டு சுடப் பெறுகின்றது. முதல் இராக்கெட்டு தானாகக் கழன்று கொண்டு அதனுடன் பொருத்தப்பெற்றுள்ள மெல்லிய உருக்குக் கம்பிவலையால் செய்யப்பெற்றுள்ள குதி குடை (Parachate) விரிந்து கொள்ளுகின்றது. இந்த இராக்கெட்டுப் பகுதியைப் பெரும்பாலும் கடலில் விழும்படி செய்து அதைப் பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது கழற்றப் பெற்றவுடன் பலநிலை இராக்கெட்டின் மொத்த எடையின் அளவும் பருமனும் குறைந்து போகின்றன. இரண்டாவது இராக்கெட்டு எரிந்து முடிந்ததும் அதுவும் முதலாவதைப் போலவே கழற்றப்பெற்று நீக்கப்-