பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏவுகணைகள்

51


நவீனப் போர் விமானங்களில் பீரங்கிகள், பொறித் துப்பாக்கிகள் இவற்றின் இடங்களைப் பெற்று வருகின்றன. இன்று போர் விமானங்கள், விமானிகளுடன் சென்று குண்டு வீழ்த்தும் விமானங்கள் இவற்றிற்குப் பதிலாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஒரு சில பணிகளுக்காகப் பயன்படுத்தப்பெற்றுவருகின்றன. இதன் விளைவாக எல்லா வகை உருவங்களிலும் பருமன்களிலும் எண்ணற்ற வகை ஏவுகணைகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டன. ஆனால், அவற்றை அவை ஆற்றும் பணியினுக்கேற்ப அடியிற் கண்டவாறு ஒன்பது அடிப்படை வகைகளாகப் பாகுபடுத்தப்பெறுகின்றன. அவையாவன :

1. வானத்தினின்றும் வானத்தில் சுடப்பெறும் ஏவுகணைகள்.

2. வானினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள்.

3. வானினின்றும் நீரின்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள்.

4. தரையினின்றும் வானத்திற்குச் சுடப்பெறும் ஏவுகணைகள்.

5. தரையினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள்.

6. தரையினின்றும் நீருக்குக்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள்.

7. நீரின்கீழினின்றும் வானிற்கு எறியப்பெறும் ஏவுகணைகள்.

8. நீரின்கீழினின்றும் தரைக்கு எறியப்பெறும் ஏவுகணைகள்.

9. நீரின்கீழினின்றும் நீரின் கீழுக்கு எறியப்பெறும் ஏவுகணைகள்.

இவை ஆற்றும் பல்வேறு பணிகளை ஈண்டு அறிந்து கொள்வது மிகவும் பொருத்தமாகும்.

1. வானத்தினின்றும் வானத்தில் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவை சாதாரணமாக மிகச் சிறியவை. இந்த வகை ஏவுகணைகள் ஒரு விமானத்தினின்றும் மற்றொரு விமானத்தை நோக்கிச் சுடப்பெறுகின்றன. இவையும் இவற்றின் இலக்குகளைத் தாக்கும் முறைகளையொட்டிப் பாகுபாடு செய்யப்பெறுகின்றன. சில ஏவுகணைகள் தாமே சென்று தாக்கவல்ல (Homing) ஏவுகணைகளாகும். இவை எதிரி