பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏவுகணைகள்

55


மீது வீசியெறியப்பெறுகின்றன. இன்று நடைமுறையிலுள்ளவை யாவும் 100 மைல்களுக்குட்பட்ட எல்லையையுடையவைகளாகவே உள்ளன. பெரும்பாலும் இவை விமானத் தற்காப்புப் படையினின்றும் நழுவித் தப்பித்த விமானங்களின்மீது பயன்படுத்தப்பெறுகின்றன. இறுதி

படம் 25 : தரையினினின்றும் வானத்திற்குச் சுடப்பெறும் ஏவுகணை

யாக, பல நூறு மைல்கள் தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஒரு கண்டம் தாண்டும் உந்து ஏவுகணையையும் (I.C.B.M.)1 அழிப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் ஏவுகணைக்கெதிர் ஏவுகணைகளும் இவ்வகையுள் அடங்கும்.

5. தரையினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவ்வகை ஏவுகணைகள் துப்பாக்கிகள், தரையைத் தாக்கும் விமானியுள்ள விமானம் இவற்றின் இடத்தைப் பெறுகின்றன. இவை தரையினின்றோ அல்லது கப்பலிலிருந்தோ தரை அல்லது கடலிலுள்ள எந்தவகை இலக்கின் மீதும் சுடப்பெறுகின்றன. இந்த வகையுள் ஒரு தனிப் போர்வீரனால் அமர்ந்து செல்லப்பெற்று டாங்கிகளின் மீதும் எதிரியின் பலமான போர்த்தளங்களையும் சுடப்பெறும் சிறிய இராக்கெட்டுகள், 10 லிருந்து 1000 மைல்கள்


1. I. C. B. M.-- Inter Continental Ballistic Missile.