உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. வழிகாட்டி அமைப்புக்கள்

ரு மாணாக்கன் தான் பயிலும் காலத்தில் பள்ளியில் நல்ல சூழ்நிலை இருந்தால்தான் சிறந்த முறையில் கல்வி பெற இயலும். இத்தகைய நல்லதொரு சூழ்நிலையை நிலவச் செய்வதற்குப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒழுங்கு முறை விதிகளடங்கிய ஏற்பாட்டினை வகுத்து வைத்துள்ளனர். ஆசிரியர்கள் நல்ல முறையில் பணியாற்றுவதற்குப் பள்ளி ஆட்சியாளரும் சில ஒழுங்குமுறை ஏற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளனர். பள்ளி ஆட்சியாளரும் ஆசிரியர்களும் நன்முறையில் செயற்படுவதற்கு அரசினர் சில விதிகளை வகுத்துள்ளனர். இந்த வகை ஏற்பாடுகளால் பள்ளி நன்முறையில் இயங்கி மாணாக்கர்கட்கு நல்லதொரு சூழ்நிலை அமைகின்றது. இந்த ஏற்பாட்டு விதிகளில் ஏதாவது ஒரு விதியினின்றும் விலகிச் சென்றாலும் சூழ்நிலை கெடுகின்றது. இதனால் தக்கவர் தலையிட்டு அதனைச் சரிப்படுத்த நேரிடுகின்றது.

இங்ஙனம் பள்ளி சரியாகச் செயற்படுவதற்குச் சில ஏற்பாடுகளிருப்பதைப் போலவே இராக்கெட்டுகளும் ஏவுகணைகளும் சரியான முறையில் இயங்குவதற்குச் சில அமைப்புக்கள் உள்ளன. இந்த அமைப்புக்களை ‘வழிகாட்டி, அமைப்புக்கள்’ (Guidance systems) என்று வழங்குவர். விண்வெளியில் பிரயாணம் செய்யும் இராக்கெட்டு வழிவிலகாது செல்லு வதற்குக் கவனமாகத் திட்டமிடப்பெறுதல் வேண்டும்; இத்திட்டத்தில் பல்வேறு கருவிகளடங்கிய விரிவான திட்டம் தேவைப்படுகின்றது. இராக்கெட்டுகளில் சாதாரணமாக இரண்டு வித அமைப்புக்கள் பயன்படுத்தப்பெறுகின்றன. ஒருவகை அமைப்பில் முதன்மையாகவுள்ள