உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழிகாட்டி அமைப்புக்கள்

68

விமானி தான் தாக்குவதற்காகச் சென்ற குண்டு வீழ்த்தும் விமானம் நண்பருடையதாக இருப்பதாகத் தெரிந்தால் அதனைத் தாக்காது திரும்பிவிடலாம். தான் செல்லும் விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் தானே அதனைப் பழுது பார்த்துச் செப்பனிட்டு விடலாம். அங்ஙனமே, தன்னுடைய கட்டுப்பாட்டு அமைப்பு எதிரி தீயிட்டதால் அழிந்துபட்டாலும், தன்னுடைய விமானத்திலுள்ள வானொலி அமைப்பு செயற்படாது போயினும், அல்லது ஒழுக்கினால் தன்னுடைய விமானத்தின் தொட்டியிலுள்ள எரிபொருளைப் பாதிக்குமேல் இழக்க நேரிட்டாலும், உடனே தான் அவற்றைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானித்து உடனே அதனைச் செய்து கொள்ளலாம்.

ஓர் இராக்கெட்டில், அல்லது ஏவுகணையில் வழிகாட்டி அமைப்பு விமானியின் இடத்தைப் பெறுகின்றது. அந்த அமைப்பு நன்முறையில் அமைந்திருப்பின் அது கிட்டத் தட்ட மனித மூளையைப் போலவே மிகத் திறனுடன் செயற்படும். ஆனால், எந்த வழிகாட்டி அமைப்பும் ஒவ்வொரு முறையிலும் மனிதனைப்போல் செயற்படும் என்று சொல்லுவதற்கில்லை. ஏனென்றால், அதனால் வேறுபடுத்தி அறிய முடியாது ; கருத்தினை மாற்றிக்கொள்ளவும் முடியாது; தூக்கியெறியப்பெற்ற பின்னர் ஏற்படும் கோளாறுகளைச் சரிப்படுத்திக் கொள்ளவும் முடியாது. எனினும், சில உயர்ந்த அமைப்புக்கள் இவற்றையும் சமாளிக்கும் திறனுடன் செயற்படுகின்றன. தவறுதலாக அது நண்பரின் விமானத்தின் மீது செலுத்தப் பெற்றால், அதனைத் தாக்காது திரும்பும் ஏற்பாடு செய்யலாம். இதற்கு அதில் I. F, F.[1] இராடார் அமைப்பு பொருத்தப்பெற்றிருத்தல்


  1. 1. I, F. F. (Identification, Friend or Foe Radar.)