பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழிகாட்டி அமைப்புக்கள்

65


செய்யப்பெறுகின்றது. வழியில் எந்தவிதக் குறுக்கீடும் நிகழ்வது கடினமாக இருப்பதற்காக ஒரு 'திட்டமாக்கும்' ('Programming')பொறியமைப்பு அதில் சேர்க்கப்பெறலாம். இதனால் அது நேராகப் பறந்து செல்வதற்குப் பதிலாகப் பறக்குங்கால் பின்தொடர்வது ஒன்று அல்லது பல தடவைகளில் மாற்றப்பெறுகின்றது. முன்னரே கணிக்கப்பெற்ற ஒரு காலத்திற்குப் பிறகு கடிகார அமைப்புப் போன்ற ஒரு பொறியமைப்பு' ஏவுகணையின் எரிபொருள் எரியும் இடத்திற்குச் செல்லாமல் தடுக்கின்றது. இப்பொழுது கணை பூமியை நோக்கி முக்குளிக்கின்றது (dives).

2. கம்பி ஆணை வழிகாட்டி : எல்லா வழிகாட்டி அமைப்புக்களிலும் இது மிகவும் எளிதானது. இன்று இது தரையிலிருந்து தரைக்கும், அல்லது வானிலிருந்து தரைக்கும் ஏவப்பெறும் மிகச் சிறிய வகை டாங்கி எதிர்ப்புப் போர்க்கருவிகளில் பயன்படுத்தப் பெறுகின்றது. ஏவுகணை, ஏவப் பெறும் கருவியினை விட்டு இலக்கினை நோக்கிச் செல்லுங்கால் அது பின்புறமாக ஒன்று அல்லது இரண்டு மெல்லிய கம்பிகளை விட்டுச் செல்லுகின்றது. இக்கம்பி துடிக்கட்டைகளினின்றும் (Bobbins) பிரிந்து இயக்குவோரின் கட்டுப்படுத்தும் பெட்டியினின்றும் தொடர்புவைத்துக்கொள்ளத் துணைசெய்கின்றது.

ஓர் எளிய விரல் அமுக்குப் பொத்தானைக்கொண்டு இயக்குவோர் மின்சாரச் சைகைக் குறிப்புக்களை அனுப்பி ஏவுகணை இலக்கினை நோக்கி வழிகண்டு செல்லுமாறு செய்யலாம். அதிக நீளமான கம்பிகளைச் சிறிய ஏவுகணையில் நிரப்புவது கடினமாதலால் இந்த வகை வழிகாட்டியை இரண்டுமைல் எல்லைவரையிலுமே பயன்படுத்தலாம்; இலக்கு கண்ணிற்குப் புலனாகும் எல்லை வரையிலும் இது


இ-5