பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

இராக்கெட்டுகள்


பயன்படுத்தப்பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட எல்லைவரை இது திறனாகச் செயற்படுகின்றது : இதனைச் செயற்படாது சிதைத்தல் இயலாது (Immune to jamming).

3. வானொலி ஆணை வழிகாட்டி : இது மேற்குறிப்பிட்ட கம்பி ஆணை வழிகாட்டியைப் போன்றதே. இதில் சைகைக் குறிப்புக்கள் கம்பிகளின் வழியாக அனுப்பப்பெறுவதற்குப் பதிலாக வானொலி மூலம் அனுப்பப்பெறு கின்றன. ஆகவே, இது நீண்ட எல்லைகட்குப் பயன்படுத்தப் பெறலாம். இதனை இயக்குவோர் இஃது எறியப்பெறும் இடத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை: இந்த இடம் சாதாரணமாகப் போர் நிகழும் இடத்திற்குப் பின்புறத்திலிருக்கும். ஆயின், இவர் முன் எல்லையிலேயே இருந்து கொண்டு ஏவுகணையைச் சுட்டு அதனைக் கட்டுப்படுத்துவார். இலக்கின் சரியான இடத்தை அவர் அறிந்திருந்தால் போதும் ; இலக்கினைக் கண்ணால் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. காரணம், அவர் இராடார் திரையில் காணும் சுவட்டினைக்கொண்டு இலக்கின் இடத்தை அறுதியிட்டு அஃது இலக்கினை நோக்கி வழி கண்டு செல்லுமாறு செய்யலாம்.

வானொலி வழிகாட்டி செயற்படாமல் செய்யப் பெறுவது எளிது. அதனைப் பயன்படுத்தும் ஏவுகணைகள் பல்வேறுவகை வானொலி அதிர்வு-எண்களில் செயற்படு மாறு அமைக்கப்பெறுகின்றன. ஏவுகணையைச் சுடுவதற்கு முன்னர் அனுப்பும் கருவியிலும் ஏற்கும் கருவியிலும் ஓர் அதிர்வு-எண்ணுக்குத் திருப்பி, அந்த அதிர்வு-எண்ணை எதிரி கண்டறிவதற்குக் காலந்தராமல் அதனைச் சுட்டுவிட வேண்டும்.

வானொலி ஆணை வழிகாட்டி அமைக்கப்பெற்றுள்ள ஒரு சில ஏவுகணைகள் தம்முடைய மூக்கில் ஒரு தொலைக்