பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

இராக்கெட்டுகள்


குப் பதிலாக ஏவுகணையில் பொருத்தப்பெற்றுள்ள ஒரு பொறியமைப்பு இலக்கினின்று வெளிவரும் அல்லது இலக்கினால் உண்டாக்கப்பெறும் ஏதாவது ஒருவகை ஆற்றலுக் கேற்றபடி இயங்கி அந்த இலக்கினை நோக்கி ஏவுகணையைச் செலுத்துகின்றது. தாமாகச் சென்று தாக்கும் டார்ப்பி டோக்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். இவற்றில் பொருத்தப்பெற்றுள்ள ஒலிசார்ந்த அமைப்பு (Acoustic system) கப்பல் இயந்திரம் உண்டாக்கும் ஒலிகளைக் கொண்டு அதனை நோக்கிச் சென்று தாக்குகின்றது.

ஏவுகணைகளில் பொருத்தப்பெறும் தாமாகச் சென்று தாக்குவதற்கேற்ற அமைப்பு அகச் சிவப்பு அல்லது வெப்பத்தை நாடும் பகுதியாகும். இந்த அமைப்பு ஏவுகணையின் மூக்கில் பொருத்தப்பெற்றுள்ளது. இந்த அமைப்பு இலக்கு வெளிவிடும் வெப்பத்தை, குறிப்பாக அதன் பொறிகளினின்றும் வெளிப்படும் வெப்ப வாயுக்களை, நாடிச் சென்று ஏவுகணை இலக்கினைத் தாக்க வழிசெய்கின்றது. இந்த அமைப்பு மிகவும் நுட்ப உணர்வுடையது; ஒரு மைலுக்கப்பாலிருப்பினும் இது சாதாரண மின்சார வீட்டடுப்பினையும் கண்டறிய வல்லது. இதனைச் சிதைத்து விட முடியாது. ஆனால், இந்த அகச் சிவப்புக் "கண்" அடர்ந்த மேகங்களினூடே பார்க்க முடியாது. இதனால் அகச் சிவப்பு ஏவுகணைகளைக்கொண்ட போர் விமானத்தில் வழிகாட்டப் பெறாத இராடார்-அமைப்பு ஏவுகணைகளின் மின்கலங்களைச் சுமந்து செல்லுகின்றன.

10. வானத்திற்குரிய வழிகாட்டி' : இது 'விண்மீன் அடிச்சுவடறி கருவி' என்றும் வழங்கப்பெறுகின்றது ; பன்னெடுங் காலமாக மாலுமிகட்கும் விமானிகட்கும் துணை


7. Colestial Guidance.