பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழிகாட்டி அமைப்புகள்

75


யாக இருந்த 'வானியல் - நேவிகேஷன்' (Astro - navigation) என்பதன் தானாக இயங்கவல்ல நகலாகும். இதில் இரண்டு அல்லது மூன்று வேறுபாடான அமைப்புக்கள் உள்ளன. ஆனால், அடிப்படையில் ஏவுகணையிலுள்ள தொலைநோக்கி ஒரு தேர்ந்தெடுத்த விண்மீனுடன் தொடர்புறுகின்றது. இதனால் அந்த விண்மீனுக்கு முன்னரே கணிக்கப்பெற்ற கோணத்தில் ஏவுகணையை வைக்கின்றது. கோணம் சதா மாறிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், ஏவுகணை இலக்கினை நோக்கி நெருங்கும் பொழுது அந்தக் கோணம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடல் எளிது. இதன் காரணமாக, ஏவுகணைத் தொடர்புடன் விண்மீன் இந்தக் கோணநிலையில் தான் இருக்கவேண்டும் என்பதைத் தொலைநோக்கி காட்டுகின்றபொழுது ஏவுகணை முக்குளிக்குமாறு வழிகாட்டி அமைப்பினைத் திருப்பி வைத்தல் கூடும்.

11. இயங்காத் தன்மையுள்ள வழிகாட்டி : எல்லாவகை வழிகாட்டிகளிலும் இது தான் மிகவும் முன்னேற்ற மடைந்துள்ள அமைப்பாகும். இஃது ஏவுகணையிலேயே இருப்பது. இதனை எளிதில் சிதைக்க முடியாது. இது மிகத் திருத்தமாக அமைந்துள்ளது. இஃது ஓர் எளிய வடிவில் போர்க் காலத்து ஒருவகை வி-2 இல் பயன்படுத்தப் பெற்றது; இந் நவீன நீண்ட எல்லைத் தாக்கு ஏவுகணைகளில் பயன்படுத்தப் பெறுகின்றது.

இதன் அடிப்படைக் கருத்து மிகவும் எளிதானது. ஏவுகணை பறந்து செல்லும்பொழுது அது செல்லும் திசையில் ஏற்படும் ஒவ்வொரு மிகச் சிறிய மாற்றத்தையும் அளக்கவல்ல ஆக்செலரோமீட்டர்கள் (Accelerometers)


8. Inertial Guidance.