பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

இராக்கெட்டுகள்


அல்லது ஜைராஸ்கோப்புகள் இதில் பயன்படுத்தப்பெறுகின்றன. இலக்கினை நோக்கிச் செல்லும் பாதையினின்றும் ஏவுகணை விலகிச் செல்லுவதாக ஏதாவது திசை மாற்றம் அமைந்தால் வழிகாட்டி அமைப்பு தானாகக் கட்டுப்படுத்தும் கருவிகளை இயக்கி அதனைச் சரியாக வைக்கின்றது. இதிலுள்ள பொறியமைப்பு மிகச் சிக்கலாக உள்ளதால், அதனை ஈண்டு விளக்குதல் இயலாது.

இங்ஙனம் பல்வேறு வழிகாட்டி அமைப்புக்களும் பகுதிகளும் இணைந்து செயற்பட்டு ஏவுகணைகள் இலக்கினை அடையத் துணைபுரிகின்றன.