பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. வளி மண்டலம்

பூமி வானவெளியில் சூரியனைச் சுற்றிவரும் ஒரு பாறைக் கோளமாகும் என்று நாம் கீழ்வகுப்புக்களில் படித்திருக்கின்றோம். பூமியின் மேற்பரப்பை ஒரு மெல்லிய காற்றுப் படலம் சூழ்ந்துள்ளது. இது வளி மண்டலம் (Atmosphere) என்று வழங்கப்பெறுகின்றது. இம் மண்டலம் நாம் யாவரும் வியக்கக்தக்க வகையில் பல செயல்களைப் புரிகின்றது. சூரியனிடமிருந்துவரும் புற ஊதாக் கதிர்கள் (Ultra violet rays) பூமியில் அதிக அளவில் படியாதவாறு பாதுகாக்கின்றது. விண்கற்களில் (Meteorites) பெரும்பாலானவை பூமியில் விழாதவாறு தடுக்கின்றது. அண்டக் கதிர்களை (Cosmic rays) மிகுதியும் பாதுகாக்கின்றது, பூமியினின்றும் சூரிய வெப்பத்தால் மேலேறும் நீராவியைத் திரும்பவும் நீராகப் பூமிக்கு வரச் செய்கின்றது. அன்றியும், பூமியின் மேற்பரப்பை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வதற்கேற்ற ஒரு கனத்த கம்பளம் போலவும் செயற்படுகின்றது, பூமியின் ஈர்ப்பு ஆற்றல் காற்றினைப் பூமியின் அருகில் இருக்குமாறு செய்கின்றது.

வளி மண்டலம் இத்தகைய பல்வேறு செயல்களைப் புரிவதை நாம் காணுங்கால் நாம் என்ன நினைப்போம்? நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகவே நூற்றுக்கணக்கான மைல் தூரம் பரவியுள்ள ஒரு கனத்த வளிமண்டலத்தைப் பூமி கொண்டிருக்க வேண்டும் என்று கருதுவோமல்லவா? ஆனால், உண்மை நிலை என்ன? பூமியின் அருகில் அதிகமான காற்றும், பூமிக்கு அப்பால் மேலே போகப் போகக் குறைவான காற்றும் உள்ளது. கடல் மட்ட உயரத்திலுள்ள நம் உடலுக்கு