பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

இராக்கெட்டுகள்


திலிருந்து ஏறக்குறைய 8 மைல் உயரம்வரை உள்ள பகுதியாகும். காற்றின் ஐந்தில் நான்கு பகுதி இந்த அடுக்கில்ை கிரப்பப்பெற்றுள்ளது. இப்பகுதியில்தான் நாம் வாழ் கின்ருேம். இங்குத்தான் காலநிலைபற்றிய மாற்றங்கள் (Weather changes), புயல்கள், அமைதி நிலைகள், துருவப் பகுதிகளில் குளிர்ந்த காற்று, வெப்ப மண்டலப் பகுதிகளில் வெது வெதுப்பான காற்று முதலிய கிலேமைகள் உண்டாகின்றன. இங்குச் சதுர அங்குலத்திற்கு 14 இராத்தல் அழுத்தம், உண்டு. காலங்லைபற்றி அறிவதற்கு இப்பகுதியில் வானிலை ஆய்வாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். இப்பகுதியில் உயரத்தில் செல்லச் செல்லச் சுமார் 300 அடிக்கு 1°F வீதம் வெப்பம் குறைகின்றது; பனி உறை நிலைக்குக் கீழ் 67°F (அஃதாவது-?ே"F) வரை குறைந்து அதற்குமேல் குறையாமல் உள்ளது.

இதற்கு அடுத்துள்ள மேலடுக்கு அடுக்குவளி மண்டலம் (Stratosphere) எனப்படும். இஃது அடிவளி மண்டலத்தின் மேல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 13 மைல் உயரம் வரை பரவி நிற்கின்றது. இங்கு ஒரே மாதிரியாக மென் காற்றுக்கள் வீசுகின்றன. இங்கு வெப்ப நிலைகள் கிட்டத் தட்ட -70°F வரை நிலவுகின்றன.

அடுக்குவளி மண்டலத்திற்கு மேலுள்ள பகுதி வேதியியல் வளிமண்டலம் (Chemosphere) என்பது. இஃது அடுக்கு மண்டலத்தின் மேல்மட்டத்திலிருந்து கிட்டத் தட்ட 30 மைல் வரை பரவியுள்ளது. இங்குச் சுமார் 10 மைல் உயரம் வரை ஓஸோன் (Ozone) அடுக்கு அமைந்துள்ளது. புற ஊதாக் கதிர்களும் ஆக்ஸிஜனும் மாற்றம் அடைந்து ஓஸோன் அடுக்கு ஏற்படுகின்றது. இந்த அடுக்கு தான் புற ஊதாக் கதிர்கள் பூமியின்மீது அதிகம் விழாமல்