பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

இராக்கெட்டுகள்


அயனி மண்டலத்திற்கு மேலுள்ள பகுதியைப் புறவளி மண்டலம் (Exosphere) என்று வழங்குகின்றனர். இங்குக் காற்றின் துகள்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். இப்பகுதி படிப்படியாக வெற்றிடத்துடன் கலக்கின்றது. எவ்வளவு உயரத்தில் இங்ங்னம் கலக்கின்றது என்பதை அறிவியலறிஞர்கள் இன்னும் துணிந்து கூற முடிய வில்லே. சுமார் 600 மைல் உயரத்தில் இது நிகழலாம் எனச் சிலர் கருதுகின்றனர். வான மண்டலத்தில் சென்ருல்தான் இதன் இரகசியங்கள் யாவும் தெளிவாக அறிதல் கூடும்.

அயனி மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் இடையிலுள்ள பகுதியில் வானநூல் அறிஞர்களும் இராக் கெட்டுப் பொறிஞர்களும் சிறப்பான கவனம் செலுத்து கின்றனர். இராக்கெட்டு இப்பகுதியினைக் கடந்து செல்லுவதில் தடை இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர் இப்பகுதிக்கு அப்பால் காற்றின் தடையே முற்றிலும் இல்லாததாகி விடுகின்றது என்று கூறலாம்.

காற்று பத்து மைல் உயரத்தில் கடல்மட்ட அளவில் பத்தில் ஒரு பங்காகி விடுகின்றது; இருபது மைல் உயரத்தில் அது கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்காகக் குறைந்து விடுகின்றது. முப்பது மைல் உயரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காகி விடுகின்றது. இங்ங்ணம் அடர்த்தி குறைந்து கொண்டே வந்து சுமார் எழுபது மைல் உயரத்தில் அஃது இலட்சத்தில் ஒரு பங்காகிவிடுகின்றது. 10,000 அடிக்குமேல் பிரயாணம் செய்வோர் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனேக் கொண்டு செல்லவேண்டும். இராக்கெட்டுகட்குக் காற்று தேவையில்லேயாதலின் அவை காற்றே இல்லாத வளி மண்டலத்திலும் செல்லுகின்றன.