86
இராக்கெட்டுகள்
மான அளவு வெப்பம் உண்டாகின்றது. அப் பொருள் பூமியின்மீது விழுவதற்குள் இந்த வெப்பம் அதனை முற்றிலும் எரித்து விடுவதற்கும் காரணமாகலாம்.
கிட்டத்தட்ட வினாடியொன்றுக்கு ஏழு மைல் வேகத்தில் (கிட்டத்தட்ட மணிக்கு 25,000 மைல் வேகத்தில்) ஓர் இராக்கெட்டு அல்லது ஏதாவது ஒரு பொருள் பூமிக்கு அப்பால் செல்லும்பொழுது அது பூமியின் கவர்ச்சி ஆற்றலின் இழுப்பினின்றும் தப்பித்து விடும். இத்தகைய இராக்கெட்டு சந்திரனுக்கும் பிரயாணம் செய்தல் கூடும். பூமிக்கு அருகில் வளி மண்டலத்தின் உராய்வு மிக அதிகமாக இருப்பதால் பூமிக்கு 100 மைல் அல்லது அதற்குக் குறைந்த உயரத்தில் ஒரு துணைக் கோளின் ஆயுள் ஒரு மணி அல்லது அதற்கும் குறைந்த காலம் ஆகும் என மதிப்பிடப்பெற்றுள்ளது. 200 மைல் உயரத்தில் ஒரு துணைக்கோள் பல வாரங்கள் வரை அயனப்பாதையில் தங்கலாம். 300 மைல், அல்லது அதற்கும் மேற்பட்ட உயரத்தில் மிக மிகக் குறைந்த காற்றே இருப்பதால் அஃது அதிக உராய்வினைத் தருதல் இயலாது. ஆகவே, அங்கு ஒரு துணைக்கோள் ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரையில் அயனப் பாதையில் தங்குகின்றது.
இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு ஸ்புட்னிக் - 1[1] சென்ற முறையைக் காண்போம். ஸ்புட்னிக்-1 மூன்றடுக்கு, இராக்கெட்டின் மீது வைக்கப்பெற்றிருந்தது. முதல் இராக்கெட்டு சுடப்பெற்றதும், அஃது ஒன்றேகால் மைல் உயரம் சென்றது; அதன் பிறகு அது திட்டப்படி அமைக்கப்-
- ↑ இது 1957 அக்டோபர் 4 இல் அனுப்பப்பெற்றது; திரும்பியது 4-1-1958 இல்.