பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிப்பயணத்தின்போதும் புலவர்களுடன் அளவளாவித் தமிழ்ச் சுவையை நுகர்ந்து கொண்டிருந்தார் இராசராச சேதுபதி அவர்கள். ச்சு ைவயர் இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவையில் சில - களின் நயத்தைப் பாராட்டினார். வேறு சில பாடல்களின் பொருள் - ) ப்பை மகாவித்துவானும் எடுத்து விளக்கினார். இதுபே ான்ற து செய்வது இந்நாளில் அரிது என்று புலவர் பிச்சுவையர் பேசியபோது மகாவித்துவான் இராகவையங்கார் மன்னர்மீது தாம் அவர் பாடிய அதே நாணி கண் புதைத்தல் துறையில் 400 பாடல்கள் பாடப்போவதாகத் தெரிவித்தார்; கோவை பாடவும் தொடங்கிவிட்டார். திருக்குற்றாலத் தில் சில காலம் தங்கி இராமநாதபுரம் வருவதற்குள் ஒருதுறைக்கோவை

நூலும் உருவாயிற்று.

==

இராசராச சேதுபதி மகாரா சா சமத்தான அரசுரிமை ஏற்ற 1910ஆம் ஆண்டிலே சிலகாலம் நடைபெறாதிருந்த நவராத்திரி விழா அரண் மனையில் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. பல்வேறு இடங்களி லிருந்தும் தமிழ்ப் புலவர்களும் வடமொழி வாணர்களும் விழாவிற்கு வந்து குழுமினர். அவ்விழாவில் புலவர் பலரும் சேதுபதிகள் மீது பாடிய பாடல்கள் பல. அவற்றைத் தொகுத்துத் தனி நூலாக மதுரை வித்திய பாது பத்திராதிபர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர் வெளியிட் டுள்ளார். அந் நூலின் முகவுரையில் நவராத்திரி விழாவின் 11ஆம் நாள் நடைபெற்ற புலவர் பெருஞ்சபையில் மகா வித்துவான் ரா. இராக வையங்கார் இராசராச சேதுபதி மீது தாம் பாடிய ஒருதுறைக் கோவை நூலை அரங்கேற்றினார் என்னும் செய்தி தெரிவித்துள்ளார். இர சராச சேதுபதி ஒருதுறைக்கோவையின் அரங்கேற்றம் குறித்துக் கவிரா பர் அவர்கள் எழுதியுள்ள செய்திகள் வருமாறு :

...மறுதினம் (விசயதசமி நாளுக்கு மறுதினம்) காலை மகாராஜா அவர்கள் திருமுன்னர் வித்வத்சபை கூடிற்று. சேது சமஸ்தான வித்வான் ரா. ராகவையங்காரவர்கள், சேற்றுார்ச் சமஸ்தான வித்துவான் மு. ரா. அருணாசலக் கவிரா ஜரவர்கள், சிவகங்கை பெரியசாமித் தேவரவர்கள், செந்தமிழ்ப்பத்திராசிரியர் மு. இராக வையங்கார் அவர்கள், சதாவதானம் சுப்பிரமணிய அய்யரவர்கள், வேம்பத்துார் பிச்சுபாரதிகள் , மதுரை சுந்தரேசுவர ஐயரவர்கள், நாகை நீலலோசனிப் பத்திராதிபர் ஜி. சதாசிவப்பிள்ளை அவர்கள், நெடுவை திரு. ராமஸ்வாமி ஐயங்காரவர்கள், மன்னார்குடி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் மு. கோவிந்தசாமி ஐயரவர்கள், விவேகபா நுப் பத்திராதிபராயிருந்த எஸ். சாமிநாத ஐயரவர்கள் முதலான பல தமிழ் வித்துவான்களும் தேவகோட்டை ஸப்டிவிஷன் ஜமீந்தார்