பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள. அரு. ராம. அருணாசலஞ் செட்டியாரவர்களும், மதுரை தேவஸ்தான கமிட்டி மெம்பரும் சிறந்த தமிழ் வித்துவானும் ஆகிய வயி. நா. க. ராம. அ. இரா மநாதஞ் செட்டியாரவர்களும், முதலான நாட்டுகோட்டை நகரத்தார் சிலரும், சமஸ்தான உத்தியோகஸ்தர் களும், சமஸ்கிருத பண்டிதர்கள் சிலரும் மற்றும் பல தமிழபிமானி களும் கூடியிருந்தார்கள். இவ்வாறு பண்டிதமணிகளாகக் கூடிய இப் பெருஞ்சபையில் சேது சமஸ்தான வித்துவானாகிய ரா. ராகவையங்கார வர்கள் மகாராஜா அவர்கள் மீது பாடிய நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒருதுறைக் கோவையை அரங் கேற்றினார்கள். ஒவ்வொரு கவிகளும் சொற் சுவை, பொருட்கவை நிரம்பப் பெற்றிருத்தலால் சபையிலிருந்த வித்துவான்கள் யாவரும் ஆநந்தபரவசமுற்றனர்.

தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழிஇ நகலி னினிதாயிற் காண்பா மகல்வா னத்

தும்ப ருறைவார் பதி' (நாலடியார் 137)

என்ற பண்டைப்புலவர் திருவாக்கு இச் சமயம் சத்தியவாக்காகவே நினைக்கத்தக்கவண்ணம் இருந்தது. ஐயங்காரவர்கள் தமிழ்க் கல்வியாலும் பிரசங்கத்தாலும் சிறப்புற்றிருப்பது போலவே கவி பாடுவதிலும் சிறப்புற்றவர்களென்று எல்லா வித்துவான்களும் உண்மையாகப் பாராட்டினார்கள். இக் கோவையிலுள்ள நானூறு கவிகளும் புறம் அகம் என்னும் இருபொருட்களுடன் விளங்கின. இந்தச் சமஸ்தானாதிபதிகள் மீது அமுதகவிராயராற் பாடப்பெற்ற ஒருதுறைக்கோ வை போன்றுளதாயினும் ஐயங்காரவர்கள் பாடிய இக் கோவையின் சிறப்பு அதிகமெனவே எல்லா வித்துவான்களும் மனமுவந்து கூறினார்கள். இக்கோவைநூல் விரைவில் அச்சியற்றப் பட்டு வெளிப்படுமாயின் தமிழ் வல்லார்கட்கு ஒர் நல்விருந்தாகு மென்பது திண்ணம். இவ்விருந்து என்று கிட்டுமென்று ஆவலுடன்

எதிர்ப்பார்க்கின்றோம்."

கோவை அரங்கேறியபோது இராசராச சேதுபதியவர்கள் மகாவித்து வான் ரா. இராகவையங்காரவர்களுக்குப் பொன்னாலான கடகத்தை அணிவித்துப் பெருஞ்சிறப்புச் செய்தார்கள். அப்போது மகா வித்துவான் அவா.கள,

- - SSTT STTTS S T -

அரீலேது ஸம்ஸ்தானம் ஸாதாரண u மஹாநவராத்திரி மஹோத் லவத்தில் வித்துவான்கள் பாடிய பாடல்கள் - முகவுரை - பக். 3-4.