பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இராசராச சேதுபதி

வானையுள்ளார் - வானுலகத்துள்ளார்; வாழ்த்தும் இசைத்தேன் - வாழ்த்துகின்ற இசைப்பாமாலையாகிய தேன்; உண்பான் - துய்ப்பவன்; திகிரி - மலை; வேள்தானையுள்ளார் - முருகனைப் போ ன்ற படை யாளரையுடையார்; தானை என்மேற் பொரத் தந்துவிட்டார் - படை களை என்மேல் போர்செய்யுமாறு விடுத்தார். தானையில்லார் படை யில்லாதவர்; புவி - பூமி: தானை பிடித்த சதுரம் - படைகளைக் கைக் கொண்ட சாமர்த்தியம்: வேள் தானையுள்ளார் - மன்மதன் சேனையைச் சேர்ந்தவராகிய பெண்டிர், பொருந்து ஆனை என்மேல் பொரத்,கந்து விட்டார் - தம் மார்பிலே பொருந்திய ஆனைத் தந்தம் போன்ற முல்ை களை என்மேல் வந்து தாக்குமாறுவிடுத்தார்; தானையில்லார் - ஆடை யில்லாதவராயினார்; புவித்தான் - பூமியில்; ஐ பிடித்த சதுரம் - வேல் போன்ற கண்களை மறைத்த விரகு. சதுரம் - சாமர்த்தியம்.

124

எய்யுஞ் சிலைக்கை மற மன்னர் கோளரி யின்றமிழ்க்குப் பெய்யும் புயக்கரன் சீராச ராசன் பெருங்கிரிவாய்ச் செய்யம் புயத் திருப் போல் வார் சுவர்க்கங் திறந்தளித்து வையம் படைக்கின் றனரறி யேனிவர் மாயங்களே.

எய்யும் சிலை - அம்புவைத்து விடப்படும் வில் மற மன்னர் - வீர மன்னர் ; கோளரி - சிங்கம் ; பெய்யும் புயக்கரன் - பொன் முதலிய நிதிவழங்கும் கையையுடையவன் ; செய்யம்புயம் - .ெ ச ந் த ா ம ைர - அம்புயத்திரு தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் சவர்க்கம் - பேரின்ப உலகு.: வையம் படைக்கின்றனர் - உலகத்தையும் தோற்றுவிக் கின்றனர். தவர்க்கத்தையும் தந்து உலகத்தையும் படைப்பது விநோத மாகும், மாயங்கள் - இந்திர சாலங்கள், கண்கட்டுவித்தை , ச வர்க்கம் - முலை ; வை அம்பு அடைக்கின்றனர் - கூரிய அம்பு போன்ற கண்களை மூடுகின்றனர்.

125

அன்பு மறனு மறிவும் பெருக்கி யனைத் துயிர்க்கு மின்பம் புரிகின்ற செங்கோல் செலுத்தி யிசை முழுதுக் தன் பங்கின் வைக்கின்ற சீராச ராசன் சயிலமின்னே துன்பங் துவைத்தவர் கோவங்கைக் கொள்ளத் துணியலரே.