பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இராசராச சேதுபதி

கண்ணே இலாது மயங்குகின்றேன் - கண்ணொளி இல்லாது திகைக் கின்றேன். தும்கை கொடும் - உம் கைகொடுத்து உதவுவீர். வரையூடு - முலைகளினிடையே; கர்ல் செல்வழி அ றி .ே ய ன் - காற்றுப்புகும் வழி தெரியேன்; அத்தனை நெருக்கமாக உள்ளன முலைகள் என்றபடி. கண் ஏ இலாது மயங்குகின்றேற்கு-கண்ணாகிய அம்பு கிட்டாது மயங்குகின்ற எனக்கு: நும் கைகொடும் - உம் கையெடுத்துப் பார்வையை வழங்குவீர்.

132

செற்றமில் சேது பதிராச ராசன் சிலம்பனையிர் குற்றமி லவ்வை யிடை வைத்த கல்வியைக் கொள்ளுமெற்கு வெற்றிவேற் கையுடன் றேன்றித் திகம்பரர் வேடத்தராய் உற்ற வருங்கலச் செப்பிஜனக் காட்டு மொழுக்கமென்னே.

செற்றம் - மிகுசினம், தணியாத கோபம், மனவைரம் குற்றம் இல் அவ்வை இடைவைத்த கல்வி - குற்றமற்ற அகரத்தை இடையே பெற்ற கல்வி, அதாவது கலவி ; எற்கு - எனக்கு; வெற்றிவேல் கையுடன் - வெற்றி வேலைப் பிடித்த கையோடு; திகம்பரர்வேடத்தர் - ஆடையணி யாத சமணமுனிவர் திருவுருவுடன்; அருங்கலச் செப்பு - சமணர்க்கு உரிய ஒழுக்க நூலான அருங்கலச் செப்பு என்னும் நூல்: திகம்பரர் வேடத்திற்கு ஒவ்வாத முறையில் வேலை ஏந்திக்கொண்டு அருங்கலச் செப்பினை விளக்குவது பொருத்தமின்று என் பார், ஒழுக்கம் என்னோ' என்றார். வெற்றிவேல் கையுடன் தோன்றி - வெற்றி படைத்த வேல்போன்ற கண்னை மறைத்த கையோடு வெளிப்பட்டு; திகம்பரர் வேடத்தராய் - ஆடையில்லா வடிவினராய்: உற்ற அருங்கலச் செப்பினை - தமக்குரித் தான ஆபரணச் செப்பை ஒத்த முலையினை. வெற்றிவேற்கை, அருங்கலச் செப்பு என்பன நூல்களின் பெயர்கள், வெற்றிவேற்கை - அதிவீரராமபாண்டியர் பாடிய நீதிநூல்; அருங்கலச்செப்பு - சமணமத தருமம் கூறும் அறநூல்.

133

ஆலு முகிலு முடல்வெளுத் தோட வதிகங்தி காலு மலர்க்கரன் சீராச ராசன் கரந்தையிலே வேலு மிலாமற் குமரன் விழைவொடு மேவலுண்டோ பாலு மிகுமென் மொழியாய் மலைமட்டும் பார்த்துவிட்டே.