பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இராசராச சேதுபதி

ஆரியர் மானம் அழியாமல் காத்து - ஆரிய வந்தணரின் மதிப்புக் குறையாமல் பாதுகாத்து ; அவனி - பூமி: கூரியல் வேல் - கூர்மை படைத்த வேலாயுதம்; குளிர்வரை - குளிர்ச்சி பொருந்திய மலை: சீரியல் சூது பொரும்போரில் பாரதம் தேற்றித்தந்தீர் - சிறப்பாக நடைபெற்ற சூதாட்டப்போர் காரணமாகப் பராதப்போர் விளையுமாறு செய்திர்; வாரி அடைத்த படலத்து இராமன் - இராமன் இலங்கை செல்வதற்குக் கடலை அடைத்து அணை கட்டிய பகுதி, வரன்முறை - முறைப்படி. சிரியல் சூதுபொரும் போரில் - அழகு அமைந்த சூது போன்ற முலைக ளுடன் நிகழவிருக்கும் கலவிப் போரில்; பாரதம் தேற்றித் தந்தீர்பரந்துள்ள அல்குலாகிய தேரினை வெளிப்படுத்தினிர் வாரி அடைத்த படலத்திராமன் - கடல்போன்ற கண்ணை மறைத்த தன்மையவாய்

நிலைத்துள்ளிர்.

186

கடலை யுடைப்பெரு கல்குர வோருள கன்றுவப்பான் இட2ல யுடைப்பு சழ்ச் சீராச ராச ைெ ழில் வரையிர். அட2லயுடைப்பெருங் கோட்டானைக் காக மமைத்துவிட்டீர் கடலை யிறைக்கைக் குவந்துகின் றிருங்கள் கல்விகன்றே.

நடலை - துன்பம்; நல்குரவோர் - வறுமையாளர்; நன்று - பெரிது, மிகவும்; உவப்பான் - மகிழும் பொருட்டு; இடலையுடைப் புகழ் , இடு,கலை அதாவது கொடையால் வரும் புகழ்; அடலை - அடுதலை, வருத்துலை; கோட்டானைக் காகம் அமைத்து விட்டீர் - .ெ ப. ரி ய கூகையைக் காக்கையாக மாற்றி விட்டீர்; கடலை இறைக்கைக்கு வந்து நின்றீர் - பறவை தின்னக் கடலைத் தானியத்தை வாரித்துவுவதற்கு வந்து நின்றீர்; கல்வி நன்று - கற்றவித்தை மிகவும் நன்று; ஒன்றை மற்றொன்ருக மாற்றும் சா லவித்தை வல்லவர் என்பதாம். அடலை யுடைப் பெருங்கோட்டு ஆனைக்கு - கொல்லும் இயல்புடைய கொம்பு களையுடைய யானைக்கு; காண்பார் உள்ளத்தை நையச் செய்யும் ஆனைத்தந்தம் போலுள்ள முலைகளுக்கு: ஆகம் அமைத்து விட்டீர் - மார்பை இடமாகக் கொடுத்து விட்டீர்; கடலை இறைக் கைக்கு உவந்து நின்றீர் - கடல் போன்ற கண்ணை இறையோடு கூடிய கையால் மறைத்து உவந்து நின்றீர். கல்வி நன்று - உம் ஒழுக்கம் மிக நன்றா யிருந்தது; ப்ொருந்தாது என்பதாம்.