பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 71

141

இரும்புரு வச்சிலை கோட்டி மனங்சவ ரேக்திழையார் விரு ம் புரு வச்சி 2ல வேள் தள வாய்வழி வேர் தனிகல் திரும்புரு வச்சிர வாள் ராச ராசன் திருவரை வாய் அரும் புரு வச் சிலை தந்தாய் தராயென் ைகி சயமே.

இரும்புருவச் சிலை - கரிய புருவமாகிய வில்; கோட்டி - வளைத்து; மனம் கவர் ஏந்திழையார்-காண் பார் உள்ளத்தை இழுக்கும் இயல்புடைய பெண்டிர்; ஏந்திழையார் விரும்பு உருவச் சிலைவேள் - பெண்டிர் விரும்பும் படியான அழகிய கரும்புவில்லையுடைய மன்மதன் போன்ற ஆணழகன்; தளவாய் - வீரர்; இகல் திரும்பு உருவச்சிர வாள் - பகைவர் பின்னிட்டோடும்படி செய்கின்ற உறுதியான வாள்; சிலை - அழகிய சிற்பச்சிலை; அரும்பு உருவச் சிலை தந்தாய் - தாமரை மொட்டுப் போன்ற வடிவுடைய முலையாகிய மலையை வெளிப்படுத்தினாய்; அரும் புருவச் சிலை தராய் - அரிய புருவமாகிய வில்லைத் தந்தாயில்லை: இங்கே புருவச் சிலை என்றது புருவத்தோடு கூடிய கண்ணைக் குறிக்கும். ஒரு சிலையைத் தந்தும் ஒரு சிலையைத் தாரா மையும் ஆகிய மாறுபாடு வியப்பிற்குரியதாம் என்றவாறு.

142

தெளியா2னக் காரியத் தேவாத வேந்தன் திருச்சுழியற் றளியாஅனப் போற்றிய சீராச ராசன் சயிலமின்னே வெளியாகத் தேசின வெறுக்க வுரைக்கின்ற மெல்லியலார் களியான விட்டுக் களிபபாரைக் கைக்கொளல் காட்சியன் றே.

தெளியானை - தெளிவான அறிவு இல்லாதவனை எண்ணித் துணியும் திறமற்றவனை. திருச்சுழியல் - பாண்டிநாட்டுச் சிவத லத்துள் ஒன்று; இத்தலத்திற்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது (7 ஆம் திருமுறை 82 ஆம் பதிகம்) . மின்னே - மின்னல் போன்று ஒளிபடைத்த பெண்ணே, விளி. நன்றாகத் தேனை வெறுக்க உரைக்கின்ற மெல்லிய லார் . பெரிதும் தேனை வெறுக்கும்படி மிக இனிமையான பேச்சு டைய பெண்டிர்; தேனினும் இனிய சொல்லரர். தேனை வெறுக்க உரைக் கின்ற மெல்லியலார் - கள்ளை வெறுத்தொதுக்குமாறு பேகம் பெண்டிர்; களியா னை விட்டுக் களிப்பாரைக் கைக்கொளல் காட்சியன்றே - சள்ளைக் குடித்துக் களியானை ஆதரியாது போக் விடுத்துக் கள்ளுண்டு களிப்பாரை ஆதரிப்பது அறிவுடைமையாகாது. காட்சி அறிவு: களியானை விட்டு -