பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னா முதமாக் கவியெழுது மென்கைக்குப் பொன்னார் மணிக்கடகம் பூட்டினான் - மின்னார் மடலெழுதும் வேளெங்கள் மாராச ராச னடலெழுதும் வீர ரரசு’ ’

என்னும் கவியால் தம் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

புலவர். மு. ரா. கந்தசாமிக் கவிராயர் ஒருதுறைக் கோவை நூலையும் நூலாசிரியரையும் குறித்து எழுதிய சிறப்புரைகள் இக்கோவை நூலுக்கு அமைந்த ஒர் அணிந்துரையாகும். மகாவித்துவான் அதன்பின் சேதுபதிகள் விருப்பப்படி வஞ்சிமா நகர் முதலிய நூல்கள் எழுதியும், வட நூல் மொழி பெயர்ப்பும், புதுக்கவி நூல்களும் ஆய்வுரைகளும் பலப்பல எழுதி வெளியிட்ட போதிலும் இர சராச சேதுபதி ஒருதுறைக்கோவை அச் சிடப்பெறாமலிருந்து விட்டது மன்னர் பெருமானும் மாண்புமிகு மகா வித்துவானும் மறைந்து பல ஆண்டுகளுக்குப்பின் இந் நூல் அச்சாகும் பேற்றினை இப்பொழுது பெற்றுள்ளது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவரும், தில்லி மத்திய அரசின் செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும், ஆனந்த மா நடம் , மாதவி அரங்கேறினாள் முதலிய பல நூல்களின் ஆசிரியரும். வாசிப்பதையும் எழுதுவதையும் அருங்கலை விநோதமாகக் கொண் டவரும், இப்பொழுது சென்னையில் வாழ்ந்து வருபவருமா கிய கெழுதகை நண்பர் திரு. க. சி. கமலையா அவர்களின் துரண்டுதலே இந் நூல் அச்சில் வருவதற்கு முதற் காரணமாகும் நண்பர் கமலைவா அவர்கள் தமிழ்ப் பண்பாட்டு மன்றத்தின் துணைத்தலைவராயிருந்த போது, ஆய்வுலகம் போற்றும் ஆசிரிய மணிகள்' என்னும் நூலைப் பதிப் பித்தார்கள். இதில் தமிழுலகில் பெரும்புலமை பெற்று விளங்கிய அரசஞ் ஆண்மு னார் முதலிய பதின்மரின் வாழ்க்கையும் தொண்டும் இடம் பெற்றுள்ளன. இந் நூலுள் சேதுசமஸ்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்களைக் குறித்து என்னை எழுதுமாறு நண்பர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். மகாவித்துவான் அவர்களின் பெரும் புலமையை என் பேராசிரியர் எஸ். வையா புரிப்பிள்ளையவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆயினும் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு வாய்க்காத சூழல். இந்த நிலையில் மகாவித்துவான் அவர்களின் நூல்கள், ஆய்வுரைகள் முதலியவற்றைத் தொகுத்து ஆராய்ந்து அவர்கள் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகவே அமைத்தேன். அப்பொழுது மகாவித்துவான் அவர்களுடைய புதல்வர் இராமநாதபுரம் வித்துவான் ஆர். இராமாநுஜையங்கார் அவர்களுடன் தொடர்பு கொண்டேன்; அவர்கள் பற்பல குறிப்புகளைத் தந்துதவினார்கள். மகா வித்துவான்