பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இராசராச் சேதுபதி

151

சிகரத்தை யொத்த தலையெடுப் பிற்புயல் சீறியிகல் புகரத்தி யூர்ந்து வருதேவை வேந்தன் புகழ்மறையோர் அகரத்தை யாதரிக் கும்ராச ராச னணிகெய்தலாய் மகரத்தி னைந்துலே யேற்றிவிட் டாய் வாளே மாற்றியெற்கே.

சிகரத்தை ஒத்த தலை - மலைமுகடு போன்ற மத்தகத்தோடு கூடிய தலை; தலை எடுப்பில் - தலையைத் தூக்குதலால், புயல் - மேகம், சீறி - சினந்து; இகல் புகர் அத்தி - பகைக்கின்ற புள்ளிகளையுடைய யானை: அகரம் - அக்கிரகாரம்; ம ைற ய வ ர் குடியிருப்பு: அணி நெய்தலாய் - அழகிய நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவளே, மகரத்தின் ஐந்து உலை ஏற்றிவிட்டாய் - ஐந்து மகர மீனை உலையில் போட்டு விட்டாய்; மகரமீன் - கெண்டைமீன்: வாளை மாற்றி - வாளை மீனை அங்ங்னம் செய்யாது மறுத்து; மகரத்தின் ஐந்து - மகரவர்க்கத்தில் ஐந்தாம் எழுத்து மு; லை ஏற்றிவிட்டாய் - மு. என்பதோடு லை என்னும் எழுத்தைச் சேர்த்தால், முலை; விட்டாய் - வெளிப்படுத்தினாய், வாளை மாற்றி. - வாள் போன்ற கண்ணை மறைத்து.

152

சிலை வளைக் கையுடைச் சீராம மூர்த்தி திருவடிக்குத் த2லவ2ளக் கையுடைச் சீராச ராசன் சயிலமின்னே மலைவளைக் கைக்கா மெனவுரைப் பாரெம் மதுகையர்க்கும் அலைவளைக் கைக்கா மெனவுரை யாரிவ் வவனியிலே.

சிலை வளைக் கை - வளைந்த வில்லையுடைய கை: தலை வளைக் கையுடைய - தலை தாழ்த்தி வணங்குதலுடைய, மலை வளைக்கைக்கு ஆம் என உரைப்பர் - சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத் தார் என்பது புராண வரலாறு. எம் மதுகையர்க்கும் - எத்தகைய வலிமை படைத்தவர்க்கும்; அ ைல வளைக்கைக்கு ஆம் என உரையார் - அலையையுடைய கடல் வளைப்பதற்கு உரியதாகும் எனச் சொல்லார்: அவனி - உலகம்; மலை - மலைக்கு ஒப்பான முலை; வளைக்கைக்கு શ્ન? - மறைத்து வைப்பதற்கு உரியதாம். அலை - கடல்போன்ற கண்: வளைக் கைக்கு ஆம்- வள்ையல் அணிந்த கைகளால் மறைத்தற்கு ஆகும்.