பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலினுள் பாடல்களில் பழைய எழுத்துவடிவங்களும் உரையில் நடைமுறை எழுத்துவடிவங்களும் இடம் பெற்றிருத்தல் காணலாம். இவ்வாறு அமைத்ததற்கு முக்கிய காரணம் நூலாசிரியரின் புதல்வர்தம் வேண்டுகோளேயாகும். கோவைப் பிரதியைத் தரும்பொழுது தம்முடைய தந்தையார் அவர்கள் எழுதியுள்ள பழைய வடிவத்திலேயே அச்சிடப்பட வேண்டும் என்னும் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்கள். அதற்கு இனங்கவே பாடல்களை மட்டும் அவர் விரும்பியபடி அமைக்கலாயிற்று. இவ் எழுத்து வடிவ மாற்றங்களை வரலாற்று உண்மையாகக் கருதி ஏற்க வேண்டுகிறோம்.

நூலின் இறுதியில் பாடல் முதற்குறிப்பு அகராதியும் சிறப்புப்பெயர் முதலியவற்றின் அகராதியும் இணைக்கப்பட்டுள்ளன.

புலவர் புரவலர் படங்களை அரிதின்முயன்று பெற்று எங்களுக்கு அனுப்பித்தந்த இராமநாதபுரம் எஸ். எம். கமால் அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகும்.

முகப்பில் ஆசிரியர் வரலாறு என்னால் எழுதப்பட்டுள்ளது. பாட்டு டைத் தலைவராகிய முத்துராமலிங்க இராசராச சேதுபதிகளின் வாழ்க் கையும் மதிப்பும் திரு. கமலையா அவர்கள் எழுதியுதவியுள்ளார்கள்.

இந்நூலைத் தக்க பதிப்பகத்தார்வழி வெளியிட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் நூல்கள் எளிதில் எல்லா ருக்கும் கிட்ட வாய்ப்பாகும் என்றும் கருதினோம், இப்பொழுது தரமான தமிழ்நூல்களைப் பல்வேறு துறைகளிலும் அஜகுற நல்லமுறையில் வெளியிட்டு வரும் சிதம்பரம் மணி வாசகர் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளத் தீர்மானித்தோம்; பதிப்ப கத்தை இயக்கி வரும் பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்களை அணுகிய போது அவர்கள் மனம் உவந்து இந்நூலை வெளியிட முன் வந்தாம்கள். அவர்களுக்கும் நூலாசிரியரின் குமாரர் வித்துவான் ரா. இராமாநுஜை யங்கார் அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தஞ்சை மாநகரில் உள்ள அச்சுக்கூடங்களைத் தேடி நான் அலைந்த போது இசைத்துறையிலும், மருத்துவத்துறையிலும் புகழ்பெற்று விளங்கிய ஆபிரகாம் பண்டிதர் நிறுவிய லா லி பிரஸ்' அறிமுகம் கிட்டியது. எனக்கு ஏற்கெனவே அறிமுகமாயுள்ள இசைப் பேராசிரியர் திரு. தனபாண்டியன் அவர்கள் இப்பொழுது அச்சக உரிமைபெற்ற