பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இராசராச சேதுபதி

தேசு - ஒளி, அறிவு; தேசின்மை - அறியாமை, சிறியோர் குழு கீழ்மக்கள் கூட்டம்; ஆசின்மை கண்டவன் - குற்றமற்ற தன்மை பொருந்தியவன்; தூசின்மையால் இடை நூலின்மையால் - துணிை இல்லாமையாலா, இடையிட்டுத் தைப்பதற்கு நூல் இல்லாமையாலா, துன்னல்விட்டு - தைத்தல் தொழிலை விடுத்து; மாசின்மையாகிய தையல் நல் வேலை மறுத்தது - குற்றமற்ற தையல் - தொழிலைச் செய்யா தொழிந்தது. தூசு இன்பை யால் - ஆடை இன்மையால், இடைநூல் இன்மையால் - நூல் போன்ற இடை இல்லாமையால்; துன்னல் விட்டு - நெருக்கமா வுள்ள இணை முலைகளை விடுத்து. துன்னல் - நெருக்கம்: இங்கே நெருங்கியமைந்த மு ைலகள்; மாசின்மை ஆகிய தையல் - குற்ற மற்ற பெண்ணே, விளி; நல் வேலை மறுத்தது - நல்ல வேலைப்போன்ற கண்ணை மூடி மறைத்தது.

184

தேவைத் துறையைத் தநுக்கோடி யைப் புல்லைத் தெண்டுறையைப் பூவைதத தேவி ககர்த்துறை யைப்பெரும் புண்ணியரீ

ராவைத்த சேது பதிராச ராச ன சலத்தினிர் கோவைக் கைக்கொண்டு கொழுகனை விட்ட கொடியவரே.

தேவைத்துறை - இராமேச வரதீர்த்தம்: தநுக்கோடி - தநுக்கோடி ஒரு தீர்த்தத்துறை புதுலை - திருப்புல்லாணி தெண்டுறை தெளிந்த நிருள்ள தீர்த்தத்துறை பூவைத்த தேவி.நகர் - பூவைத் தலையில் சூடிய தேவி வீற்றிருக்கும் தேவி.நகர், தேவிபட்டணம். தீர்த்தத்துறை; புண் ணிய நீர் - தீர்த்த ம்; அசலத்தினிர் - மலையினுள்ளிர்; கோவை - அரசினை: கொழுநன் - கணவன், கொடியவர் - கொடுமை வாய்ந்தவர்; அரசனை நம்பிப் புருவடினைக் கைவிட்ட ச தைபோல’ என்பது ஒரு பழமொழி. கோ - கண்; கோவைக் கைக்கொண்டு - கண்ணைக் கையால் பற்றிக் கொண்டு; கொழு நனைவிட்ட - கொழுவிய தாமரை அரும்புபோன்ற முலைகளை வெளிப்படுத்திய, கொடியவரே - கொடி போன்றவரே.

185

கறைபட்ட வாண்ம ற வோருக் கதிபதி கற்றவர் தாம் குறைபட் டி லாது புரப்பவன் காவிக் கொடியுடையோன் தறைவிட்டி லாப்புகழ்ச் சீராச ராசன் றமிழ் வரையாய் பொறைவிட்ட காரணத் தாற்கறை பூண்கை பொருந்த யதே,