பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை - 만 9

மானமுடையவராக மதிக்கப்படுவரோ என்பது வெளிப்படை, மானம் - பெருமை, மதிப்பு: அவமானம் - இழிவு, அவமதிப்பு. மான் அங்கைக் கொண்டார் - மான்கண்போன்ற கண்ணை அழகிய கையில் கொண்டவள்.

199

கலையினே க் காட் டிய பேரறி வாளர்தங் கண்னேயொத்து நிலையினைக் காடடிய கோன்ரகு காத னிகர்த்துவென்றிச் சிலையினைக் காட்டிய சீராச ராசன் றினே க்குளத் தாய்

மலையினைக் காட்டி வண் டோகை மறைத்தனை மாதர சே.

கலை - கலை வல்லமை; நிலையினைக் காட்டிய கோன் - நிலைத்து வாழ வழிசெய்த அரசன், ரகுநாதன் - இராமன்; நிகர்த்து - ஒத்து: வென்றிச் சிலையினைக் காட்டிய - வெற்றி வில்லின் திறத்தை வெளிப் படுத்திய, தினைக்குளத்தாய் - தினைப்புனத்தில் உள்ளவளே மலை யினைக் காட்டி வண்தோகை மறைத்தனை - மலையைக் காட்டி அதில் உள்ள வளப்பமான தோகையுடைய மயிலை மறைத்து விட்டாய் மலை யினைக் காட்டி - முலைகளை வெளிப்படுத்தி: வண்டோ கை மறைத் தனை - வண்டுக்கு ஒப்பாம் கண்களைக் கையால் மறைத்துள்ளாய் .

200

து மாண் புடைய புலவோ ருடுவெனச் சூழவைக்குச் சீமான் மதியெனுஞ் சீராச ராச்மன் றேவையன் குய் காமா ன லமிகு கும்ப முனிதனைக் கைவிட்டபின் கோமான் பொதிகையைக் கொண்டென் பயன்மலர்க் கோமள்மே.

_

துரமாண்பு - தூய நல்ல பெருமை; உடு - நட்சத்திரம்; சீமான் - செல்வ முள்ளவன்; மதி - பூரணச் சந்திரன்; அரசவையில் புலவோர் நட்சத்திரங்கள் போலச் சூழ்ந்திருக்க இராசராசன் அவர் நடுவே முழுமதி போல ஒளி விசித் திகழ்வான் என்பதாம். தேவை - இராமேசுவரம்: கும்ப முனி - அகத்தியர், பொதியமலையை இருப்பிடமாக உடையவர்: காம அனலம் மிகு கும்பமுனிதனைக் கைவிட்டபின் - விரும்பும் அனலமாகிய வேள்வி நெருப்பை மிகவளர்க்கும் அகத்தியரைக் கைவிட்டபின், கோமான் பொதிகை - பசுவும் மான்களும் நிறைந்த பொதிகைமலை: காம அனலம் மிகு கும்பமுனி - காம்மாகிய நெருப்பை மிகச் செய்யும் குடம் போன்ற முலைகள்; கோமான் பொதி கையை - கண்ணாகிய மானை மூடிய கை. கோமளம் - அழகிய பெண்.