பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1 0 1

2O3

படையை யிலாதவ ராகி யிகன்றவர் பாறவெல்வோன் இடையை யிலாத மடவார் மடலு ரெழிலனெற்குத் தடையை யிலாதவன் சீராச ராசன் றமிழ் வரையாய் உ டையை யிலாதவ ரேமு ன் புருவ மொளிப்பவரே.

L് '് '_ബ് III இலாதவராகி == படைத்துணையை வேண்டாதவராய்: இகன்றவர் - போரிட்டவர் பாற - தோற்றோடி மறையும்படி, மடல் ஊர் எழிலன் - மடலேறும்படியான அழகன், எற்கு - எனக்கு; தடையை இலாதவன் - தடை எதுவும் விதியாதவன்; $2_ 6) 1_5) LLI இலாதவர் ஆடை இல்லாதவர்; முன்பு உருவம் ஒளிப்பவர் - முற்படத் தம் உருவத்தை மறைத்துக்கொள்வர்; முன் புருவம் ஒளிப்பவர் - என் முன்னே புருவத்தோடு கூடிய கண்ணை மறைப்பவர்.

2O 4

முர் தமிழ் தாமெனட் பாவாணர் சூட்டு முழும துரச் செந்தமிழ் மா?லயன் சீராச ராசன் றிகிரியிலே பந்த மிலாத பெரிய வரைவிட்டுப் பாவைகல்லாய் அந்த மிலாவண் டரைக்கைக் கொளலென் ன ழகுடைத்தே.

முத்து முற்பட அமிழ்து அமுதம்: முழுமதுரச் செந்தமிழ்மாலை யன் - முற்றும் இனிமை படைத்த செந்தமிழ்ப்பாமாலை கொண்டவன்; பந்தம் பற்று, கட்டு; பாவை நல்லாய் - விளி. அந்தம் - அழகு, வண்டர்சிறியோர், கிழோர்; பற்று இல்லாத பெரியோரைச் சாராது விடுத்து அழகில்லாத சிறியோரை ஏற்றுக்கொள்வது எத்தகைய அழகைத் தரும் என்பது வெளிப்படை. பந்தம் - கச்சுக்கட்டு; பெரிய வரை - பெரிய மலை; முலை. முலைகளைக் கச்சினால் கட்டாது விடுத்து என்பதாம். அந்தம் இலா - குருட்டுத் தன்மை இல்லாத வண்டரை - வண்டுக்கு ஒப்பாம் கண்களை; கைக்கொள்ளல் - கையால் மறைத்தல்.

2O5

செருத்தற் குடஞ்சுட்டி னு னிறைந் தான் றின ஞ் சேர்விருந்தை பருத்தற் குவந்தவன் றன்னறி வார்மனத் தாலுலகைத் திருத்தற்குக் கைக்கொண்ட சீராச ராசன் செழுங்கிரியீர் ஒருத்தற்குக் கைகொடுக் காதா ருறுகண்கை யுள்ளவரே.