பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () 4 இராசராச சேதுபதி

நெருங்கிய பந்து போன்ற முலைகளை மறையாது விடுத்தவர்: ; ) கண்

கையில் தோன்றல் - பொருந்திய தம் கண்ணைக் கையிடத்தே .ெ ருந்த வைத்தல்; அதாவது கண்ணை மறைத்தல் .

210

சினங்காவல் செய்யா மதமா வு ைகத்துச் செருவுழக்கித் தினங்காவல் செய்கின்ற சீராச ராசன் றிகிரியிலே கனங்காவல் செய்கின்ற கூந்தன்மின் னே படை காவல்செய்து தனங்காவல் செய்யா தவருள ரோவித் தரணியிலே.

சினம் காவல் செய்யா மதமா - சினத்தைக் காக்காது மிகுதியும் கொண்டுள்ள மதயானை; உகைத்து - ஏறிச் செலுத்தி; செரு உழக்கி - போரில் படைக்ளை அழித்து; காவல் செய்தல் - காத்தல் தொ ழிலைச் செய்தல், அரசாளுதல்; திகிரி - மலை; கனம் - மேகம்; கனம் காவல் செய்கின்ற கூந்தல் - மேகம் போன்ற கரிய கூந்தல்; படை காவல் செய்து படைகளை வைத்துக் காப்பாற்றி, தனம் காவல் செய்யாதவர் - స్హో காக்காதவர். தரணி - உலகு; படை-ஆயுதம், வேல்; வேல் போன்ற கண்ணைக் காத்து; அதாவது கண்களை மறைத்து; தனம் காவல் செய்யாதவர் முலைகளை மறையாது விடுத்தவர்.

211

அல்லி ரொளியி னரண்மனை முற்று மழகுசெய்தோன் கொல்லிர் படைத்தறு கண் மற வோரிறை கூடியுன் எல்லீரும் வம்மெனும் சீராசராச னிருங் கிரிவாய் கல்லீர் கராத்திர மேமறைத் தீர்கரி கண்ணுறவே.

அல் ஈர் ஒளியின் இருளைக் கவ்வும்படியான ஒளி யி ன ல் அரண்மனையிலிருந்து தோன்றும் ஒளியினால் இருள் நீங்கிப் பகல் போலத் தோன்றும் என்பதாம். கொல் ஈர் படை - கொல்லும் தன்மை ப ைடத் ததும் பகைவரை அறுத்தெறிவதுமான ஆயுதம், தறுகண் மறவோர். - அஞ்சாமையுடைய வீரர்; இறை - த ைல வ ன் வம் வாருங்கள்: நல்லீர் - விளி. கரி நண்ணுறவே கராத்திரமே மறைத்தீர் அடுத்து வரவும் கையிலுள்ள அம்பை மறைத்து வைத்தீர். கர חתם הסILIT5 அத்திரம் கராத்திரம். கர அத்திரமே மறைத்தீர் - கையினால் அம்பு போன்ற கண்ணை மறைத்தீர்; கரி நண்ணுற யானைத் தந்தம் போன்ற மூலை அடுத்துவர, முலைகள் வெளிப்பட என்றவாறு.