பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இராசராச சேதுபதி

வளை - வளை என்பது வண்டுக்கும் பேர். வண்டு போன்ற கண் லைக் கைப்பற்றுதல் குற்றமாம் என்பதாம்.

223

இம்மா கிலமர சாள்ராச ராச னிருங்கிரிவாய் மைம்மானுங் கூந்தன் மயிலேங் கூடற் குவந்த திலே சும்மாகிற் சாபந் தொடுத்தவம் போமறைத் தோயன் றியே அம்மாநிற் கோபர் தணிவதுங் காட்டினை யாரணங்கே.

மாநிலம் - சிறந்த பூமி: மை - மேகம்; மைம்மானும் கூந்தல் : மேகம் போன்ற கரிய கூந்தல்; கூடற்கு வந்து - சேர்வதற்காக வந்து: கூடற்கு உவந்து - இணைவதற்கு மகிழ்ந்து, சும்மா - வீணாக சாபம் தொடுத்த ஆ மறைத்தாய் - வில்லோடு கூடிய அம்பை மறைத்தாய்: புருவத்துபுன் சேர்ந்த அம்பு போன்ற கண்ணை மறைத்தாய். அம்மா - வியப்பு: நிற்கோபம் தணிவதும் காட்டினை - உன்னுடைய கோபம் தணிவதும் வெளிப்படுத்தினாய்; நிற்கோ பந்து அணிவதும் காட்டினைஉன்னிடத்தே பந்து போன்ற முலை அழகு செய்தலையும் வெளிப் படுத்திக் காட்டினாய்.

224

கோலங்கைக் கொண்டதன் குன்ற வளரிபொற் குன்றிலிட்டு ஞாலங்கைக் கொண்டவன் சீராச ராச னளிர்வரையீர் சீலங்கைக் கொண்ட சிவனு மரியுஞ் சிவனுகிற்பீர் ஆலங்கைக் கொண்டின் னமுத கலச மளித்தலினே.

கோலம் - அழகு, வளரி - வளரித்தடி என்னும் ஆயுதம், வளர்கின்ற கீர்த்தி. பொற்குன்று - மேருமலை; இட்டு - பொறித்து, ஞாலம் - பூமி, நளிர்வரை - குளிர்ச்சி பொருந்திய மலை; சீலம் - தெய்விகப்பெருங் குணம்; சிவனும் அரியும் - சிவனும் திருமாலும்; சிவனுகிற்பீர் - ஒத்துள் எளிர்; ஆலம் - நஞ்சு, கண்; அமுத கலசம் - அமுதம் பொருந்திய கல யம், முலை. சிவன் நஞ்சை ஏற்று உண்டவர்; திருமால் தேவர்களுக்கு அமுத கலசத்தைத் தந்தவர். நஞ்சைக் கைக் கொண்டு அமுத கலசம் அளிக்கும் தன்மையால் சிவனையும் திருமா லையும் ஒத்துள்ளிர் என்ப தாம். நஞ்சு போன்ற கண்ணைக் கையால் மறைத்து அமுத கலசமாகிய முலைகளை வெளிப்படுத் த்ெ தந்தீர் என்றவாறு,