பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 11.1

225

செருமாத் திரைப்பொழு திற்கொற் றஞ்செய்யுந் திறன்மறவன் பொருமாத் திரைக்கட லான்ராச ராசன் புன வரையார் பெருமாத் திரைதங்கை வைத்துக்கொண் டார்குளிர் பெய்யிவிடம்

ஒருமாத் திரையில்ல தாமுலை யெற்கே யுதவினரே.

செரு - போரில்; ஒரு மாத்திரைப் பொழுதில் - ஒரு நொடிப்பொழு திற் குள்ளாக, கொற்றம் செய்யும் - வெற்றி பெறும்; திறல் மறவன் - ஆற்றல் பெற்ற பெருவீரன்; பொருமாத் திரைக் கடலான் - ஒன்றோ டொன்று மோதி எழுகின்ற அலைகளோடு கூடிய கடலுக்குரியவன்; புனம் - தினைப் புனம்; பெரு மாத் திரை தம் கையில் வைத்துக்கொண்டுபெரிய சிறந்த திரைச் சீலையைத் தம் கையில் வைத்துக் கொண்டு; ஒரு மாத் திரை இல்லாத மூலை - ஒரு சிறந்த திரை இல்லாத மூலை; பெரு

மாத் திரை - பெரிய அழகிய கடல் போன்ற கண், ஒரு மாத்திரை

இல்லதாம் முலை - மூலை என்பதில் ஒரு மாத்திரை குறைந்தால் முலை என்றாம்.

22G

தும்புருக் கொண்ட விசையுங் குறுமுனி தொல்கலேயும் கம்புருக் ககாண்டவன் சீராச ராச னளிர்வரைவாய் வம்புருக் கொண்ட வரும்பளித் தம்பை மறைத்தனைவேள் அம்புருக் கொண்ட தரும்பென் றறிந்திலை யாரணங்கே.

தும்புரு - தும்புரு முனிவர்; யாழிசையில் வல்லவர்: குறுமுனி - அகத்தியர்: தொல்கலை - பழங்கலை நூல்கள்; நம்பு உருக்கொண்ட வன் - விரும்புகின்ற அழகிய வடிவினையுடையான்; நம்பு - இசை, விருப்பம்; இசையிலும் தமிழ்த் தொல் கலைகளிலும் வல்லவர் சீராக ராசன் என்பதாம். வம்பு - வாசனை, கச்சு; அரும்பு - பூவரும்பு, முலை; அம்பை - அழகிய பையை , அம்புபோன்ற கண்ணை மன்மத ஆக்கு அம்பு அரும்பு; அந்த அரும்பு எனக்குத் துன்பம் செய்தலை அறிக்க வில்லை, ஆரணங்கு - தெய்வப் பெண் போன்ற பெண்.

227

நெறியிற் சிறந்தியல் பாற்கர வேந்த னிறைதவமிங் கறியப் பிறந்தவன் சீராச மாணிக்க மண்ணலெனச் செறியத் திகழன் பி னோன்ராச ராசன் செழுங்கிரியாய் பொறியிற் சிறந்ததுள் ளாய்கோட்டை யென்புறம் போக்கினையே .